ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்த 5 இந்திய கிரிக்கெட் வீரர்களின் உறவினர்கள்

0
2050
Arjun Tendulkar and Vidyut Sivaramakrishnan

ஐபிஎல் தொடர் 2008ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நடந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து 13 வருடமாக சிறப்பாக நடந்துகொண்டிருந்த ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இருப்பினும் இந்தியாவில் நிலைமை சரியானவுடன் மீண்டும் ஐபிஎல் தொடர் நடக்கும் என பிசிசிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளும் இந்திய வீரர்கள் 7 பேரும் வெளிநாட்டு வீரர்கள் 4 பேரும் கொண்ட அணியை தேர்ந்தெடுத்து போட்டிகளில் விளையாட வேண்டும். ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முக்கியக் காரணமே இளம் இந்திய வீரர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக தான்.

ஐபிஎல் தொடரில் விளையாடி அதன் மூலம் பல இந்திய வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்து சர்வதேச இந்திய அணியில் தற்பொழுது மிகச் சிறப்பாக விளையாடி கொண்டு இருக்கின்றனர். அப்படி ஐபிஎல் தொடரில் சீனியர் கிரிக்கெட் வீரர்களின் உறவினர்கள் சிலரும் விளையாடும் வாய்ப்பை பெற்று இருக்கின்றனர். அவர்களைப் பற்றி தற்போது பார்ப்போம்.

5. ஞானேஸ்வர ராவ்

ஞானேஸ்வர ராவ் இந்திய முன்னாள் வீரர் வேணுகோபால் ராவ் அவருடைய சகோதரர் ஆவார். வேணுகோபால் ராவ் இந்திய அணிக்காக 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். வேணுகோபால் ராவ் ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய சகோதரர் ஒரு முறை ஐபிஎல் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

ஞானேஸ்வரர் கொசி டஸ்கேர்ஸ் கேரள அணிக்காக 2011ம் ஆண்டு விளையாடினார். இரு போட்டிகளில் மட்டுமே அவருக்கு விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது அந்த இரு போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 19 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. மயங்க் டகார்

Mayank Dagar

இந்தியாவின் தலைசிறந்த ஓபனிங் வீரரான விரேந்திர ஷேவாக்கின் உறவினர் ஆன மயங்க் டகார் டெல்லியைச் சேர்ந்தவர் ஆவார். உள்ளூர் ஆட்டங்களில் ஹிமாச்சல பிரதேச அணிக்காக சிறப்பாக விளையாடக் கூடியவர் மயங்க் டகார். இடதுகை ஸ்பின் பவுலர் ஆன இவர் மிகவும் ஃபிட்டான ஒரு வீரர் என்று அனைவரும் கூறி வருகின்றனர். 2018ம் ஆண்டு நடந்த எதையோ டெஸ்டில் இவரது மதிப்பெண் 19.3 ஆகும். இந்த மதிப்பெண் மணிஷ் பாண்டே மற்றும் விராட் கோலியை விட மிக அதிக மதிப்பெண் ஆகும். அந்த அளவுக்கு தன் உடல் தகுதியை சிறப்பாக வைத்திருக்கூடிய வீரர் இவர்.

2018ம் ஆண்டு இவரை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. அவ்வளவாக இவரைப்பற்றி தற்பொழுது வரை யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 24 வயதான இவர் கண்டிப்பாக வருங்காலத்தில் மிகச்சிறந்த வீரராக இந்திய அணியில் வலம் வருவார் என்று அனைவரும் கூறுவது குறிப்பிடத்தக்கது.

3. அர்ஜுன் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் கடவுள் என்று செல்லமாக அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரை பற்றி இந்த ஒரு கட்டுரையில் நம்மால் கூறிவிட முடியாது. அப்பேர்ப்பட்ட சாதனைகளுக்கும் உங்களுக்கும் சொந்தக்காரரான அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஆவார்.

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடியவர் சச்சின் டெண்டுல்கர். மும்பை அணிக்காக முதல் முதலில் ஆரஞ்சு கேப்பை கைப்பற்றியதும் அவரே. சச்சின் டெண்டுல்கரை போலவே அவருடைய மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணிக்காக இந்த ஆண்டு விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். 20 லட்ச ரூபாய்க்கு மும்பை அணி அவரை இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் வாங்கியது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு ஆல்ரவுண்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2. அனிருத்தா ஸ்ரீகாந்த்

இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவர்களுடைய காலத்தில் இங்கு அதிரடியாக விளையாடிய கூறிய ஒரு வீரர் ஆவார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பயிற்சியாளராகவும் ஐபிஎல் அணிகளுக்கு ஆலோசகராகவும் விளங்கி வந்தார்.

இவருடைய சொந்த மகன் அனிருதா ஸ்ரீகாந்த் சென்னை அணிக்காக முதன்முதலில் ஐபிஎல் போட்டிகளில் விளையாட தொடங்கினார். 2011ஆம் ஆண்டில் சென்னை அணி தொடரை வென்ற பொழுது இவர் அந்த அணியில் விளையாடியவர் ஆவார். அதன் பின்னர் சென்னை அணியில் இருந்து வெளியேறி ஐதராபாத் அணியில் சில காலம் விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1. வித்யுத் சிவராமகிருஷ்ணன்

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கட் சிவராமகிருஷ்ணன் ஆவார். என்னுடைய சொந்த மகன் விதிவுட் சிவராமகிருஷ்ணன் சென்னை அணிக்காக 2008ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் விளையாடினார்.

அந்தத் தொடரில் வித்யூத் சிவராமகிருஷ்ணன் மொத்தமாக 9 போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடினார். அதிலும் தனது முதல் போட்டியிலேயே டெல்லி அணிக்கு எதிராக அரை சதம் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் சரியாக விளையாடாத காரணத்தினால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்திய அணி வீரர்களிலேயே 11வது வீரராக களமிறங்கி பர்ஸ்ட் கிளாஸ் செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.