சூர்யகுமாரின் ரகசியம்.. விசேஷ பயிற்சி குறித்து சக நண்பர் வெளியிட்ட தகவல்

0
2427

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூரிய குமார் யாதவ் சர்வதேச டி 20 தரவரிசை பட்டியல் 890 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். நடப்பாண்டில் சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் மற்றும் ஒரே ஆண்டில் ஆயிரம் எண்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமைகளை அவர் பெற்று இருக்கிறார். சூரியகுமார் யாதவும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி விராட் கோலிக்கு பிறகு அதிகம் பேசப்படும் இந்திய வீரராக உலக அளவில் பிரபலமாக இருக்கிறார்.

இதற்கு காரணம் சூரியகுமார் யாதவின் அதிரடி ஆட்டம் தான். குறிப்பாக டிவில்லியர்ஸ்க்கு பிறகு மைதானத்தின் சுற்றி 360 டிகிரி ரன்களை சேர்க்கும் ஸ்டைலை சூரியகுமார் வைத்திருக்கிறார். அவருடன் ரஞ்சி கிரிக்கெட் போட்டி விளையாடிய விநாயக் மானே அவருடைய பயிற்சி ஸ்டைல் குறித்து விவரித்து இருக்கிறார். சூரியகுமாரின் இந்த சாதனைக்கு முக்கிய பங்காற்றியவர் பயிற்சியாளர் கோடாடாத், அவர் சூரியகுமார் வித்தியாசமான புற்களை வைத்து தனி ஆடுகளத்தை உருவாக்கினார். கடினமாக இருக்கும் அந்த பிட்சில் பந்து நன்கு பவுன்சாகும். அதில் சூரியகுமார் யாதவ் அளவுக்கு இரண்டு ஓவரில் 28 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து விடுவார். உண்மையான ஆட்டத்தில் இருப்பது போல் பில்டர்கள் நிற்கவைக்கப்பட்டு அவருக்கு பந்து வீசப்படும்.

இதில் சூரியகுமார் அந்த இலக்கை வெற்றிகரமாக அடிக்க வேண்டும். ஒருவேளை அவர் ஆட்டம் இழந்து விட்டால் அதற்கு மேல் பேட்டிங் செய்யமாட்டார். கேட்டால் உண்மையான போட்டியில் தமக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காது என்று கூறி வெளியேறி விட்டு மீண்டும் களத்துக்கு வந்து புதிதாக ஆரம்பிப்பார். சூரிய குமார் யாதவுக்கு என்று தனி பவுலர்கள் உள்ளிட்ட வசதிகள் செய்து தருவோம். ஒருநாள் டி 20 போட்டியில் சிறப்பாக சூரிய குமார் விளையாடுகிறார். எனினும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொலிப்பாரா என்று எனக்கு தெரியாது. எனினும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் அதில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வார் என்று விநாயக் மானே கூறினார்.