என்னை பொறுத்தவரை.. கவர் ட்ரைவ்னா அந்த இங்கிலாந்து ஜாம்பவான் வீரர்தான் பெஸ்ட்.. அஸ்வின் தேர்வு

0
47

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கி நடைபெற இருக்கிறது. இதற்காக தற்போது இரண்டு நாடுகளைச் சேர்ந்த அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங்கில் கவர் டிரைவ் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்களை தனது பார்வையில் தேர்வு செய்திருக்கிறார்.

- Advertisement -

கவர் டிரைவ் என்று கூறினால் நினைவுக்கு வருவது இந்தியாவின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி. முன் காலை சற்று முன்னோக்கி நகர்த்தி ஆப் சைடுக்கு வெளியே வரும் பந்துகளை சரியாக கணித்து அதற்குத் தகுந்தவாறு பேட்டை வீசுவது கிரிக்கெட்டின் உன்னத அழகியல் நிகழ்வாகும். விராட் கோலி விளையாடும் அந்த ஒரு ஷாட்டை இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல் உலகின் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் புகழ்ந்து பேசி இருக்கின்றனர்.

அதற்கு அடுத்தபடியாக கவர் டிரைவில் சிறந்து விளங்குவது பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம். அவரும் விராட் கோலியை போன்று சிறப்பான உடல் மொழியை கொண்டு இந்த வகையான சாட்டில் சிறந்து விளங்குவார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் யூடியூப் சேனலில் அளித்த ஒரு பேட்டியில் மார்க்கஸ் டிரஸ்கோதிக் மற்றும் மைக்கேல் வாகன் ஆகியோரை சிறந்த கவர் டிரைவ் விளையாடும் வீரர்களாக தேர்வு செய்து இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “மார்கஸ் டிரஸ்கோத்திக். அவரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? எனக்கு தெரியும். அவரது கவர் டிரைவ் ஷாட் எனக்கு மிகவும் பிடித்த வகையில் இருக்கும். அவருக்கு அடுத்ததாக மற்றொரு இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகனைத் தேர்வு செய்கிறேன். அவரது டிரைவ் ஷாட்களும் அற்புதமாக இருக்கும். அவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பதை தொடர்ந்து இந்தியர்களின் விருப்பமான வீரராக இருக்கிறார். எனவே அவர்கள் இருவரையும் தேர்வு செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

அஸ்வின் தேர்வு செய்த இந்த இரண்டு வீரர்களும் 2000 களின் முற்பகுதியில் இங்கிலாந்து அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிய கிரிக்கெட் வீரர்கள். ட்ரெஸ்கோதிக் இங்கிலாந்து அணிக்காக 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 14 சதங்களுடன் 43.79 சராசரியுடன் 5825 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆஸ்திரேலிய அணிக்கு செம லக்.. மழையால் தப்பிச்சிட்டீங்க – இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் ருசிகர பதிவு

வாகன் 82 டெஸ்ட் போட்டிகளில் (கேப்டனாக 51) விளையாடி 18 சதங்களுடன் 41.44 சராசரியில் 5719 ரன்கள் இங்கிலாந்து அணிக்காக எடுத்திருக்கிறார். விராட் கோலி மற்றும் பாபர் அசாம் தற்போதைய நவீனக் கிரிக்கெட்டின் சிறந்த கவர் டிரைவ் வீரராக இருந்த போதும் அஸ்வின் அவர்கள் இருவரையும் தேர்வு செய்யாமல் இங்கிலாந்து வீரர்களை தேர்வு செய்திருப்பது அவரது விருப்பமாக இருந்தாலும் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -