இந்திய அணியின் புதிய கோச்சாக ராகுல் டிராவிட் நியமனம் – ரவி சாஸ்திரியைப் பற்றி பேட்டியில் புகழாரம்

0
81
Rahul Dravid and Ravi Shastri

இந்திய அணி தற்போது டி20 உலக கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இன்னும் வேற அளவில் அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்புகள் இருந்தாலும் கிட்டத்தட்ட இந்திய அணி வெளியேறிவிட்டது என்றே சொல்லலாம்.பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக வரிசையாக இரண்டு தோல்விகளை இந்திய அணி பதிவு செய்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் மோசமாக தோல்வியுற்றதால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு பிரகாசமாக இல்லை. இதனால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் டி20 விளையாடும் அணியை சற்று மாற்றி அமைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இந்தத் தொடர் தொடங்கும் முன்னரே விராட் கோலி தான் கேப்டன் பொறுப்பிலிருந்து இந்தத் தொடர் முடிந்தவுடன் விலகுவதாக அறிவித்து விட்டார். அதுவும்போக இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக் காலமும் இந்தத் தொடர் முடிந்த உடன் முடிவுக்கு வருகிறது. புது கேப்டன் மற்றும் புதிய பயிற்சியாளர் உடன் இந்திய அணி தனது அடுத்த தொடரை ஆட உள்ளது.

பயிற்சியாளர் பதவிக்கு அடுத்து யார் வருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் ஏற்கனவே முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிடின் பெயர் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளராக டிராவிட் இருந்துள்ளார். அவரின் தலைமையில் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் சீனியர் அளிக்கும் அவர் பயிற்சியாளராக வர வேண்டும் என்ற குரல் எழும்பிய வண்ணமே இருந்தது. தற்போது அந்த விருப்பம் உண்மையாக மாறியுள்ளது.

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட இருப்பது இந்திய அணியில் உள்ள பல குறைகளை தீர்க்கும் என்பதை ரசிகர்கள் கணிசமாக நம்பி வருகின்றனர். பயிற்சியாளர் பதவிக்கு வந்த பின்பு ராகுல் டிராவிட் இந்திய அணி குறித்து பேசியுள்ளார். அவர் பேசும்போது தற்போதைய இந்திய அணி மிகவும் சிறப்பாக உள்ளது என்றும் தனது பதவி காலத்தில் அதை அப்படியே தொடர விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலகக் கோப்பை தொடர் முடிந்த பின்பு இந்திய அணி நியூசிலாந்து அணியை டி20 தொடரில் சந்திக்கிறது. ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் அவதாரம் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.