ஆரம்பத்தில் சிறப்பாக துவங்கி இறுதியில் நேர்மாறாக காணாமல் போன 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள்

0
8558
Dinesh Mongia and Robin Uthappa

உலக அளவில் அனைத்து நாடுகளிலும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று அனைத்து இளைஞர்களும் ஆசைப்படுவது இயல்பான விஷயம். ஆனால் மற்ற நாடுகளைவிட இந்திய நாட்டில் மிக அதிக அளவில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட ஆசைப்படுவார்கள். இளம் வயதிலிருந்தே இந்திய அணியில் இடம் பெற்று விளையாட வேண்டும் என்கிற கனவோடு கிரிக்கெட் விளையாட தொடங்குவார்கள்.

மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் அதிக மக்கள்தொகை இருப்பதால், இங்கே போட்டி மிக மிக அதிகம். எனவே கோடிக்கணக்கில் கிரிக்கெட் விளையாட வரும் இளைஞர்கள் ஒரு சிலர் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள் மறுபக்கம் ஒரு சிலருக்கு அந்த வாய்ப்பு கடைசிவரை இல்லாமலேயே போய்விடும்.

- Advertisement -

வாய்ப்பு கிடைத்த இளைஞர்கள் ஆரம்பத்தில் மிக சிறப்பாக கிரிக்கெட் விளையாடத் துவங்கினாலும் பின்னர் நாளடைவில் சிறப்பாக விளையாட காரணத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்விடுவார்கள். அப்படி காணாமல் போன கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்

1. யூசப் பதான்

Yusuf Pathan in ODI

இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய வீரர்களில் இவரும் ஒருவர். ஆக்ரோசமாக இவர் இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய தொடர்ந்து இந்திய அணியின் ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்பட்டது. உலக கோப்பை தொடரில் சவுத் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக இவர் மிக சிறப்பாக விளையாடினார்.

ஆனால் பதானால் ரவீந்திர ஜடேஜா மற்றும் சுரேஷ் ரெய்னா இருக்கையில் நிறைய போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டது. இந்திய அணிக்காக கடைசியாக இவர் 2012ல் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

2. தினேஷ் மோங்கியா

ஆரம்ப காலகட்டத்தில் இவர் மிக சிறப்பாக விளையாடி வந்தார். அதன் காரணமாக இவருக்கு 2003ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் 11 போட்டிகளில் இவரால் 120 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. கடைசியாக 2007-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியில் இவர் 57 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஒருநாள் போட்டிகளை போலவே டி20 போட்டிகளிலும் சர்வதேச அளவில் இவர் விளையாடி இருக்கிறார். இந்திய அணியின் முதல் டி20 போட்டியில் இவர் மிக சிறப்பாக விளையாடி 38 ரன்கள் அடித்தார். இருப்பினும் அவருக்கு 2007-ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தினேஷ் படிப்படியாக வாய்ப்புகள் இன்றி இந்திய அணியில் விளையாடாமல், இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது ஓய்வு அறிக்கையை வெளியிட்டார்.

3. பார்த்தீவ் பட்டேல்

பார்த்தீவ் பட்டேல் ஆரம்ப காலகட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, இந்திய அணியின் சிறந்த வருங்கால பேட்ஸ்மேனாக இவர் வருவார் என்று அனைவரும் நினைத்தார்கள். 2002ஆம் ஆண்டு தன்னுடைய 15வது வயதில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இந்திய அணிக்காக அனைத்து போட்டிகளிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக விளையாடி வந்தார்.

அதன் பின்னர் மகேந்திர சிங் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் வருகையால் இவருக்கான வாய்ப்பு படிப்படியாக குறைந்து போனது. மகேந்திர சிங் தோனி 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ஹார்த்திக் பட்டேல் மீண்டும் தென்னாபிரிக்கா எளிதாக 2018 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். ஆனால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட போவதில்லை என்பதுதான் உண்மை.

ஏற்கனவே ரிஷப் பண்ட் மற்றும் விருத்திமான் சஹா ஆகிய வீரர்கள் மிக சிறப்பாக விளையாடி வருவதால் அவருக்கு இனி இந்திய அணியில் விளையாடும் வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

4. கரன் நாயர்

Karan Nair
Photo: BCCI

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் இவர் மிக சிறப்பாக விளையாட தொடங்கினார். குறிப்பாக 2016 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இவர் மிக சிறப்பாக விளையாடினார். அந்த போட்டி இவருக்கு மூன்றாவது போட்டியாகும். தனது 3-வது டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்துக்கு எதிராக மிக சிறப்பாக விளையாடி 303 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதற்கு முன் விரேந்திர சேவாக் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முச்சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதன்பின்னர் அந்த டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமாக விளையாடி படிப்படியாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்து வந்தார். அதன் பின்னர் உள்ளூர் போட்டிகளில் மீண்டும் சிறப்பாக விளையாடி வந்தார். அதன் காரணமாக 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இவரை அணியில் ஒரு வீரராக சேர்த்தது.

இருப்பினும் அந்த டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட இவருக்கு விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும் இளம் வீரரான அவர் மீண்டும் இந்திய அணியில் எப்போது வேண்டுமானாலும் களமிறங்கி விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. ராபின் உத்தப்பா

ராபின் உத்தப்பா விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக சர்வதேச அளவில் விளையாட தொடங்கினார். 2006 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே 86 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் மிகச்சிறப்பாக இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடினார் குறிப்பாக 2007ஆம் ஆண்டு நடந்த நட்வெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்காக 6வது ஒருநாள் போட்டியில் மிக சிறப்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

7 போட்டிகளைக் கொண்ட அந்த தொடரில் முதல் 5 போட்டி முடிவில் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் வெற்றி பெற்றிருந்தது. ஆறாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும், எனவே அந்த போட்டியில் இந்திய அணி நிச்சயமாக வென்றே தீரவேண்டும் என்கிற நிர்பந்தம் இருந்தது. அப்போது களமிறங்கிய ராபின் உத்தப்பா இறுதியில் மிக சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். இருப்பினும் ஏழாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

2007ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 விக்கெட் இழந்து 39 ரன்கள் மட்டுமே குறிவைத்து தவித்தது பின்னர் ராபின் உத்தப்பா மிகச் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அதன் காரணமாகவே இந்திய அணி அந்த போட்டியை சமன் செய்ய முடிந்தது.

மேலும் அந்தப் போட்டி சமனில் முடிவடைந்ததால் பௌல் அவுட் எனப்படுகிற முறையின்படி ஒவ்வொரு அணியில் இருக்கும் பந்துவீச்சாளர்களுக்கு மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்படும். மூன்று வாய்ப்புகளிலும் பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக பந்துவீசி ஸ்டம்பை பதம் பார்க்க வேண்டும். அதிலும் ராபின் உத்தப்பா மிகச் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியின் வெற்றியை உறுதி படுத்தி தன்னுடைய திறமையை காண்பித்தார்.

மிக சிறப்பாக துவங்கிய நாளடைவில் சரியாக விளையாடாத உத்தப்பா கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணியில் இருந்து காணாமல் போய் தற்பொழுது ஐபிஎல் தொடரிலும் உள்ளூரு தொடர்களிலும் மட்டும் விளையாடி வருகிறார்.