இந்திய கிரிக்கெட்

நாங்க தோற்கலை.. எங்களுக்கு மூணு காரணம் இருந்துச்சு.. அதுக்கு தான் வேலை செஞ்சோம் – சூரியகுமார் யாதவ் பேட்டி

நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி நிர்வாகம் வித்தியாசமான பிளேயிங் லெவனை களம் இறக்கியது ஏன்? என்பது குறித்து கேப்டன் சூரியகுமார் யாதவ் பதிலளித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசியது. நியூசிலாந்தின் சிறப்பாக விளையாடி 200க்கும் மேற்பட்ட ரன்கள் குவிக்க இந்திய அணி ஆறு பேட்ஸ்மேன்களுடன் விளையாடி தோல்வி அடைந்தது. இந்த தொடரில் இந்திய அணிக்கு கிடைத்த முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டமிட்டே செய்தோம்

இதுகுறித்து கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது ” நாங்கள் திட்டமிட்டு ஆறு பேட்ஸ்மேன்களை மட்டுமே வைத்து களம் இறங்கினோம். நாங்கள் ஐந்து பவுலர்களுடன் விளையாட வேண்டும் என்று நினைத்தோம். எங்களை நாங்களே சோதித்துப் பார்க்க முடிவு செய்தோம். 180 முதல் 200 ரன்கள் டார்கெட் இருந்தால், ஆரம்பத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தால் எப்படி பேட்டிங் செய்வோம் என்று பார்க்க விரும்பினோம்”

“நாங்கள் எடுத்த இந்த முடிவு மிகவும் சரியானது. ஏனென்றால் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றிருக்கும் எல்லா வீரர்களுக்கும் முன்கூட்டியே விளையாடுவதற்கு நாங்கள் வாய்ப்புக் கொடுத்தாக வேண்டும். நாங்கள் இந்த போட்டியை அதற்காகவே பயன்படுத்திக் கொண்டோம்”

- Advertisement -

இது ஒரு சவால்

“நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும்பொழுது சிறப்பாக விளையாடியிருக்கிறோம். ஆனால் நாங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்து இருநூறு ரன்களை விக்கெட்டுகளை இழந்து எப்படி துரத்துவோம் என்று பார்ப்பது முக்கியமாக இருந்தது. இது எங்களுக்கு ஒரு சவால்தான். அடுத்த போட்டியிலும் நாங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்ய முடிந்தால் இதை செய்வோம்”

இதையும் படிங்க: இந்தியாவுக்கு கிடைக்காத ஒன்னு எங்களுக்கு கிடைத்தது.. அதை நான் கண்டுபிடிச்சு ஜெயிச்சேன் – மிட்சல் சான்ட்னர் பேச்சு

“நேற்று பனிப்பொழிவு இருந்ததால் இன்னும் ஒரு ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்திருந்தால் போட்டியை வென்றிருப்போம். 50 ரன் வித்தியாசத்தில் தோற்று இருக்கிறோம். துபே விளையாடியது போல இன்னொருவர் யாராவது உடன் விளையாடு இருந்தால் இந்த போட்டியை வெகு எளிதாக எங்களால் வென்றிருக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by