இந்திய கிரிக்கெட்

ருதுராஜ் அபிஷேக்க.. அந்த காரணத்துக்காகவே பாராட்டறேன்.. சின்ன பசங்கதான் சரி ஆயிடுவோம் – சுப்மன் கில் பேட்டி

இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் தலைமையில் தற்பொழுது இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் இருவரது சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி வென்று தற்காலிகமாகச் சமன் செய்திருக்கிறது.

- Advertisement -

இன்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் சுப்மன் கில் இரண்டாவது ஓவரில் வெளியேற இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் இருவரும் பவர் பிளேவில் பொறுமையாக விளையாடி 36 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள்.

தங்களது விக்கெட்டை நிலை நிறுத்திக் கொண்ட பின் இருவரது ஆட்டமும் அதிரடிக்கு மாறியது. குறிப்பாக அபிஷேக் ஷர்மா மிகச் சிறப்பாக விளையாடி 46 பந்துகளில் சதம் அடித்தார். இன்னொரு பக்கத்தில் இறுதிவரை நின்ற ருதுராஜ் 47 பந்தில் 77 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 76 பந்தில் 137 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இந்திய அணி இரண்டு விக்கெட்டை மட்டுமே இழந்து 234 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணியால் இலக்கை நோக்கி அதிரடியாக செல்ல முடியவில்லை. அதே சமயத்தில் விக்கெட்டை காப்பாற்றி விளையாடவும் முடியவில்லை. அந்த அணிக்கு மாதவேரே அதிகபட்சமாக 43 ரன்கள் எடுக்க, 134 ரன்கள் மட்டுமே எடுத்து 18.4 ஓவரில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தற்காலிகமாகத் தொடரை சமன் செய்திருக்கிறது.

- Advertisement -

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு இந்திய கேப்டன் சுப்மன் கில் பேசும் பொழுது “வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தோல்வியிலிருந்து வெற்றிக்கு திரும்ப வருவது சிறப்பானது. ருதுராஜ் மற்றும் அபிஷேக் பேட்டிங் செய்த விதம், குறிப்பாக பவர் பிளேவில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. பந்து நன்றாக மூவ் ஆனது. இப்படியான சூழ்நிலையில் ருதுராஜ் மற்றும் அபிஷேக் இருவரும் சிறப்பாக இன்னிங்ஸை பில்டப் செய்தார்கள்.

இதையும் படிங்க : உலக சாம்பியன் அவங்க வேலையை காட்டிட்டாங்க.. ஆனா எங்க தோல்விக்கு இதுதான் காரணம் – சிக்கந்தர் ராஸா பேச்சு

அதே சமயத்தில் நேற்று இந்த அழுத்தத்தை எங்களால் சரியாக கையாள முடியாமல் போனது. மேலும் இது ஒரு புதிய இளம் அணி. இந்த போட்டியில் சிலர் தங்களுடைய முதல் போட்டியை விளையாடுகிறார்கள். சிலருக்கு அதிக சர்வதேச போட்டிகள் விளையாடிய அனுபவம் இல்லை. நாங்கள் முதல் ஆட்டத்தில் இருந்து அழுத்தத்தை விரும்புகிறோம். அதிலிருந்து நாங்கள் வெற்றி பெற்று வருவதை எதிர்பார்க்கிறோம். அடுத்த மூன்று போட்டிகளையும் நாங்கள் எதிர் நோக்குகிறோம். விளையாடுவதற்கு வீரர்கள் இல்லாமல் இருப்பது தான் கடினமானது. தற்பொழுது நிறைய வீரர்கள் இருப்பது நல்ல விஷயம்தான்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -
Published by