கிரிக்கெட்

முகம் தெரியாத நபர்களால் ஹேக் செய்யப்பட்ட இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ட்விட்டர் கணக்கு – டுவீட் செய்த பதிவுகள் இணைப்பு

இந்திய அணி தொடர்ச்சியாக பல வெற்றிகளை கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையில் குவித்து வருகிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடந்து முடிந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர் அதன் பின்னர் தற்போது நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் என அனைத்திலும் இந்திய அணி ஒயிட் வாஷ் செய்து அபார வெற்றி அடைந்துள்ளது.

- Advertisement -

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியை மிக சிறப்பாக வழிநடத்தி வரும் கேப்டன் ரோஹித் வருகிற மார்ச் 4ம் தேதி முதல் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்த தயாராக இருக்கிறார். இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டி மொஹாலியில் நடைபெறுகிறது. இது விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடதக்கது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கின்றது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப் போவதில்லை. ஆனால் பகலிரவு போட்டியாக நடைபெற இருக்கின்ற இரண்டாவது டெஸ்ட் போட்டிடில் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் ரோஹித் டெஸ்ட் போட்டியிலும் தொடர் வெற்றியை பெற்றுத் தருவார் என்று அனைத்து அனைத்து இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

ரோஹித் ஷர்மாவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது

பொதுவாக ட்விட்டர் வலைதளத்தில் பிரபலங்களுடைய ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படும். அவ்வாறு ஹேக் செய்யப்பட்டு சில வீணான விஷயங்களில் அல்லது வீணான புகைப்படமோ அல்லது வீணான வீடியோ அவர்களது கணக்கில் ஹேக் செய்பவர்கள் பதிவேற்றம் செய்வார்கள்.

அந்த வரிசையில் இன்று ரோஹித் ஷர்மாவின் ட்விட்டர் கணக்கு ஒருசில நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. அவ்வாறு ஹேக் செய்யப்பட்ட அவரது கணக்கில் சில வீணான பதிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

அதில் ஒரு பதிவில் “உங்களுக்கு தெரியுமா? சலசலக்கும் தேனீக்கள் சிறந்த குத்துச்சண்டை பைகளை உருவாக்குகின்றன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எந்த நோக்கத்தில் இந்த பதிவை ஹேக் செய்தவர்கள் பதிவிட்டார்கள் என்று புரியவில்லை.

மேற்கூறிய முதல் பதிவை தொடர்ந்து இரண்டாவது பதிவில் “காயினை டாஸ் செய்வது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதை நான் பெரிதாக விரும்புவேன் குறிப்பாக அவரை சுற்றப்படும் காயின் எனது வயிற்றில் வந்து விழும் வேளையில்” என்று புரியாத வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இரண்டாவதாக பதிவேற்றப்பட்ட இந்த பதிவுக்கு பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே பதில் அளித்திருந்தார். “கேப்டன் ரோஹித் எல்லாம் சரிதானா, நன்றாக தான் இருக்கிறீர்களா ?? இந்தக் காய் முகத்தில் பூவா தலையா என்பதை எப்படி முடிவு செய்வது” என்பது போல் அவர் சுட்டிக்காட்டி கூறியிருந்தார்.

இந்த இரண்டு பதிவுகளை தொடர்ந்து மூன்றாவதாக ஒரு பதிவு பதிவேற்றப்பட்டது. அந்தப் பதிவில் “கிரிக்கெட் பந்துகள் உண்ணக்கூடியவை, சரிதானே ??” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறிய இந்த மூன்று பதிவுகளும் இன்னும் ரோஹித் ஷர்மா ட்விட்டர் கணக்கில் டெலிட் செய்யப்படவில்லை. இந்த பதிவுகளுக்கு கீழ் இந்திய ரசிகர்கள் நகைச்சுவையாக பல கமெண்ட்டுகளை பதிவிட்டு வந்து கொண்டிருக்கின்றனர்.

Published by