108 ரண்களில் பொட்டலமான நியூசிலாந்த அணி! – இந்திய அணி அனல் பறக்கும் பந்துவீச்சு!

0
1223

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது . இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி தொடக்கமே தடுமாற்றமாக அமைந்தது .

ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி பத்துபவர்களில் 15 நாட்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது .

அந்த அணியில் பிலிப்ஸ் மட்டும் சிறப்பாக ஆடினார் . அவர் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார் . அவரை தவிர்த்து சான்ட்நர் 27 ரன்களும் பிரேஸ்வெல் 22 ரண்களும் எடுத்தனர் . நியூசிலாந்து அணியில் மற்ற எந்த பேட்ஸ்மன்களும் இரட்டை இலக்க ரண்களை கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

இந்திய அணியின் பந்துவீச்சு ஆரம்பம் முதலே சிறப்பாக இருந்தது . குறிப்பாக முகமது சமி இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசினார்.ரண்களை மட்டும் கட்டுப்படுத்தாமல் விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூசிலாந்து அணியை ஆரம்பத்திலேயே தடம் மாறச் செய்தார் .

இந்திய அணி எல்லா பந்துவீச்சாளர்களுமே இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசினர் சமி மூன்று விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் . முகமது சிராஜ் தாக்கூர் மற்றும் குல்தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்ட்டை வீழ்த்தினர்.

இறுதியாக நியூசிலாந்து அணி 34.3 ஓவர்களில் 108 கண்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது .