6 பந்தில் 4 ரன்களுக்கு 3 விக்கெட், தரமான என்ட்ரி கொடுத்த முகமது சமி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சிறப்பான வெற்றி!

0
9930

கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டபோது நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது சமி உலக கோப்பைக்கு தனது அறிமுகத்தை வெற்றியுடன் துவங்கியிருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா அணி வந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஜோடி 78 ரன்கள் அடித்தது. கேஎல் ராகுல் 33 பந்துகளில் 57 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார் அடுத்ததாக வந்த விராட் கோலி 19 ரன்களும் ரோகித் சர்மா 15 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் வழக்கம் போல தனது அதிரடியை துவங்கினார். இவரும் 33 பந்துகளில் 50 ரன்கள் விலாசி ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 186 ரன்கள் எடுத்து 7 விக்கட்டுகளை இழந்திருந்தது.

பின்னர் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச் மிகச் சிறப்பாக விளையாடி வந்தார். மற்றொரு துவக்க வீரர் மிச்சல் மார்ஸ் 18 பந்துகளில் 35 ரன்கள் விலாசி அவுட் ஆனார். ஸ்மித் 11 ரன்களும் மேக்ஸ்வெல் 23 ரன்களும் அடித்து ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் கேப்டன் பின்ச் நிதானத்துடன் அவ்வப்போது கிடைக்கும் மோசமான பந்துகளில் பௌண்டரிகளை அடித்து ரன் சேர்ப்பில் ஈடுபட்டு வந்தார்.

கீழ் வரிசையில் வந்த வீரர்கள் எவரும் இவருடன் சேர்ந்து நல்ல பாட்னர்ஷிப் அமைக்காததால், சீரான இடைவெளியில் விக்கெட் விழத்துவங்கியது. கடைசியில் பின்ச் 5 4 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

ஆஸ்திரலியாவிற்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. பயிற்சி ஆட்டம் என்பதால் பிளேயிங் லெவலில் இல்லாத வீரர்களும் விளையாடலாம். அதன் அடிப்படையில், பிளேயிங் லெவனில் இல்லாத முகமது சமி பந்து வீச அழைக்கப்பட்டார். இப்போதுதான் போட்டியில் மிகப்பெரிய ட்விஸ்ட் அமைந்தது.

முதல் இரண்டு பந்துகளில் நான்கு ரன்கள் அடிக்கப்பட்டது. அடுத்த நான்கு பந்துகளிலும் வரிசையாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார் முகமது சமி. அதில் ஒரு ரன் அவுட் அடங்கும். இந்திய அணி நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்ததால், 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலக கோப்பையில் பும்ராவிற்கு மாற்று வீரராக உள்ளே வந்த முகமது சமி தனது முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியது பலரின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதும் கூடுதல் பலத்தை தந்திருக்கிறது.