கிரிக்கெட்

ஐசிசி உலக கோப்பைத் தொடரில் மீண்டும் ஓர் முறை பாகிஸ்தானை வீழ்த்தி தோல்வியே அடையாத அணியாக உயர்ந்து நிற்கும் இந்திய மகிளர் அணி

இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாகி விடுவார்கள். அந்த அளவுக்கு வெற்றிக்காக இந்த இரு அணிகளும் தங்களால் முடிந்த வரை போராடும். இடத்தில் நடந்து முடிந்த ஆண்களுக்கான ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் முதல் முறையாக பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை ருசி பார்த்தது.

- Advertisement -

கடந்த ஆண்டு ஆண்களுக்கான ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்பொழுது நியூசிலாந்தில் மகளிருக்கான 50 ஓவர் ஐசிசி உலக கோப்பை தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி

போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்திய மகளிர் அணி 244 ரன்கள் குவித்தது. இந்திய மகளிர் அணியில் அதிகபட்சமாக பூஜா வஸ்த்ரெய்க்கர் ஐம்பத்தி ஒன்பது பந்துகளில் 8 பவுண்டரி உட்பட 67 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக சினேகா ராணா 53*ரன்கள், மந்தானா 52 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 43-வது ஓவரில் முடிவிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய மகள் நிலையில் சிறப்பாக பந்து வீசிய ராஜேஸ்வரி கைக்வாடு 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

ஐசிசி உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் இந்தப் போட்டியையும் சேர்த்து நான்கு போட்டிகளில் மொத்தமாக விளையாடி உள்ளனர். அந்த நான்கு போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி வெற்றியை ருசி பார்த்துள்ளது. அது மட்டுமன்றி இந்து இரு அணிகளும் இது வரையில் (இந்த போட்டியையும் சேர்த்து) மொத்தம் 11 போட்டிகள் விளையாடி உள்ளனர். அந்தப் 11* போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் மகளிர் அணியை மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய காரணத்தினால் இந்திய மகளிர் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Published by