“இந்தியா எங்க நாட்டுல ஜெயிச்சிட்டோம்னு சொல்ல விரும்பறாங்க.. ஆனா பாருங்க..!” – டெம்பா பவுமா பேச்சு!

0
848
Bavuma

இந்திய அணி 31 ஆண்டுகளில் 8 டெஸ்ட் தொடர்களில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட அந்த அணிக்கு எதிராக இதுவரை வெல்லவில்லை.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி வெளிநாடுகளில் போட்டியை மட்டுமல்லாமல் தொடரை வெல்லும் அளவுக்கு மாறிய பிறகும், ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரை வென்ற பிறகும், தென் ஆப்பிரிக்காவில் மட்டும் இன்னும் டெஸ்ட் தொடர் வெற்றி கைக்கொள்ளவில்லை.

- Advertisement -

மிகச் செழிப்பான காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் இருக்கும் நிலையில், உலகக் கோப்பை தொடர்களை இந்திய அணி வெல்லாதது எப்படி உறுத்தலாக இருந்து வருகிறதோ, அதேபோல் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடர் இல்லாததும் இருந்து வருகிறது.

விராட் கோலி தலைமையில் 2021 ஆம் ஆண்டு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பெரிய அனுபவம் இல்லாத தென் ஆப்பிரிக்க அணியிடம் இந்திய அணி இரண்டு டெஸ்ட்களில் தோற்று தொடரை இழந்தது. இந்த முறை ரோகித் சர்மா தலைமையிலான அணி வரலாற்றை, இந்திய தரப்பு விரும்பும் விதமாக மாற்றி எழுதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டி குறித்து பேசி உள்ள தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா கூறும் பொழுது “ஒரு தென் ஆப்பிரிக்க அணியாக நாங்கள், இந்திய அணி இங்கு வெற்றி பெற்றதில்லை என்கின்ற சாதனையை தக்க வைத்திருப்பதில் பெருமை அடைகிறோம். வீரர்களாகிய எங்கள் அனைவருக்கும் அந்த பெருமை உணர்வு இருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் பொழுது புதிய சவால்கள் வருகிறது என்பதையும் புரிந்து கொள்கிறோம். அந்த வகையான சவால்களில் நாங்கள் கவனம் செலுத்த விரும்புகிறோம். இந்தியாவுடன் விளையாடும் ஒவ்வொரு முறையும் போட்டியை அதிக பேர் பார்க்கிறார்கள், போட்டி குறித்து நிறைய ஆய்வுகள் வருகிறது.

ஒரு பேட்ஸ்மேனாக என்னை பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தில் வைத்து தள்ளப் போகிறார்கள். அவர்கள் நல்ல பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசையை வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் புகழ்பெற்ற சிறந்த டெஸ்ட் வீரர்கள் இருக்கிறார்கள்.

இந்தியா ஒரு வலிமையான அணி. எனவே அவர்கள் தென் ஆப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறோம் என்று கூட ஆசைப்படுகிறார்கள். எனவே அவர்களுக்கு இதன் மூலம் ஒரு உந்துதல் கிடைக்கிறது. எனவே நாங்கள் அவர்களுக்கு எதிராக மிகச்சிறந்தவர்களாக இருக்க வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!