நேரம் மாற்றம்; இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் டி20 போட்டி!

0
35
Ind vs Wi

தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் 5 10 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் ஷிகர் தவான் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0என கைப்பற்றியது. அடுத்து ரோகித் சர்மா தலைமையில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது 4 போட்டிகள் முடிந்து இருக்க, 3-1 என தொடரை கைப்பற்றி இருக்கிறது!

இந்த நிலையில் இன்று வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் இரவு எட்டு மணிக்கு தொடங்குவதாக இருந்தது.

ஆனால் தற்போது 5வது போட்டி துவங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. இதே போல் மூன்றாவது டி20 போட்டியிலும் லக்கேஜ் வரவில்லை என்று காலதாமதம். அந்தப் போட்டியை மிகத் தாமதமாக இரவு 11 மணி அளவிலேயே தொடங்கியது.

ஏற்கனவே டெஸ்ட் டீசல் நடக்கும் போட்டிகள் இரவு ஆரம்பிப்பதால் இந்திய ரசிகர்கள் போட்டியைக் காணுவதில் சிக்கல் இருந்தது. இந்த நிலையில் ஏதாவது ஒரு காரணத்தில் இந்த தொடரில் போட்டிகள் மேலும் மேலும் தாமதமாகிக் கொண்டே வருவது இந்திய ரசிகர்களை போட்டியைப் பார்க்க முடியாமல் செய்கிறது.

நேற்றைய 4-வது டி20 போட்டியும் காலதாமதமாகவே துவங்கியது. இன்று ஐந்தாவது டி20 போட்டியும் இரவு 8 மணிக்கு துவங்குவதில் இருந்து முக்கால் மணி நேரம் தாமதமாக 8.45 மணிக்கு இரவு துவங்குகிறது. டாஸ் 8.15 மணிக்கு போடப்படுகிறது.

மேலும் இந்த தொடரின் 4-வது 5-வது போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிகளுக்காக இரு அணி வீரர்களுக்கும் விசா எடுப்பதில் ஏற்கனவே பிரச்சினை நிலவி தற்போது அது முடிக்கப்பட்டு போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது!

அயர்லாந்து இங்கிலாந்து என சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட இந்திய அணி அடுத்து வெஸ்ட்இண்டீஸ் என்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கெடுத்தது. இன்றோடு இந்திய அணியின் ஒரு மிகப்பெரிய சுற்றுப்பயணம் முடிவுக்கு வருகிறது. இந்திய அணியின் இந்த சுற்றுப்பயணம் பெரும்பாலும் இந்திய அணிக்கு வெற்றிகரமாகவே அமைந்திருக்கிறது. இதற்கு அடுத்து இந்திய இளம் அணி ஜிம்பாப் வே செல்கிறது. இந்திய நட்சத்திர வீரர்களை கொண்ட வழக்கமான அணி ஆகஸ்டு இருபத்தி எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை யுனைடெட் அரபு எமிரேட்டில் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது!