இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி – இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன?

0
412

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1:30 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே இரண்டுக்கு பூஜை என்ற கணக்கில் வென்ற நிலையில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் இலங்கை அணி விளையாடுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை தொடரை முழுமையாக கைப்பற்றி சாதனை படைக்க வேண்டிய உத்வேகத்தில் இருக்கிறார்கள்.

இந்தத் தொடர் முடிந்தவுடன் இரண்டு நாட்கள் இடைவெளியில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதனால் வீரர்களுக்கு ஓய்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக நாளை களம் இறங்கும் இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இன்றைய பயிற்சியில் இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ் நீண்ட நேரம் பேட்டிங் செய்தனர்.

இதனால் இரண்டு பேரும் அணிக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பேட்டிங் பயிற்சியாளர் அதனை மறுத்துவிட்டார். ஆனால் முடிவெடுக்க வேண்டியது ரோகித் சர்மா என்பதால் மாற்றம் நிகழ வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் விளையாடலாம் என தெரிகிறது. இதேபோன்று பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு தேவை என்பதால் உம்ரான் மாலிக் க்கு பதிலாக ஆர்ஸ்தீப் சிங் இந்திய அணியில் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது.

இதனிடையே போட்டி நடைபெறும் கிரீன் பீல்ட் மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமானது என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சு நன்றாக எடுபடும் என்றும் பந்து பேட்டிங்கிற்கு வராத காரணத்தால் மிகவும் கவனத்துடன் பேட்ஸ்மேன் விளையாடி இன்னிங்சை கட்டமைக்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்திய அணியை வரவேற்க கேரள ரசிகர்கள் மைதானம் சுற்றி கட்அவுட் வைத்திருக்கிறார்கள்.