இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. இந்தியாவின் பிளேயிங் லெவன் என்ன?

0
231

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெறுகிறது. கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக ஓய்வில் இருந்த நிலையில் தற்போது அணிக்கு திரும்பியுள்ளார். டி20 தொடரில் ஓய்வில்  இருந்த விராட் கோலி, ராகுல் ஆகியோர்   ஒருநாள் போட்டியில் விளையாடுகின்றனர். இந்த நிலையில் பும்ரா தொடரை விட்டு கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டார் .

- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை தொடக்க வீரராக ரோகித்தின் ஜோடி இஷான் கிஷனா அல்லது சுப்மான் கில்லா என்ற கடும் போட்டி நிலவி வருகிறது. விராட் கோலி தனது இடத்தை உறுதி செய்து கொள்ள, டி20 கிரிக்கெட்டில் அதிரடி காட்டிய சூரியகுமார் யாதவ் நம்பர் 4வது வீரராக களம் இறங்குவார். ஐந்தாவது இடத்தில் கேஎல் ராகுல் விளையாடுவாரா இல்லை ஸ்ரேயாஸ் களமிறங்குவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆறாவது வீரராக களமிறங்குவார். டி20 கிரிக்கெட்டில் தொடர் நாயகன் விருது வென்ற அக்சர் பட்டேல்  7வது வீரராக விளையாட வாய்ப்பு உள்ளது.சுழற்பந்துவீச்சாளராக சாஹலுக்கு வாய்ப்பு உள்ளது. இதைப் போன்று கடைசி மூன்று இடத்திற்கான வேகப்பந்துவீச்சாளர் பட்டியலில் முகமது சமி, முகமது சிராஜ் ,உம்ரான் மாலிக் ஆகியோர் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இதில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆர்ஸ்தீப் சிங்கிற்கு ரோஹித் சர்மா வாய்ப்பு வழங்கலாம். அப்படி வழங்கும் பட்சத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் உம்ரான் மாலிக்கை  தான் அவர் அணியிலிருந்து எடுப்பார் என்று தெரிகிறது. கௌஹாத்தியில் பணிபொழிவு அதிகம் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசுவதை சிறந்த முடிவாக இருக்கும்.

ஹர்திக் பாண்டியா போல் ரோகித் சர்மா ரிஸ்க் எடுத்து அணியை சிரமத்திற்கு தள்ள மாட்டார் என்பதால் பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் நிம்மதியில் இருக்கிறார்கள். நடப்பாண்டு நடைபெறும் உலக கோப்பை தொடருக்கு இந்திய அணியை தயார் செய்யும் பணி இன்று முதல் தொடங்குகிறது. 2023 ஆம் ஆண்டின் இந்தியா களமிறங்கும் முதல் ஒருநாள் போட்டி என்பதால் வெற்றியுடன் புத்தாண்டை இந்திய அணி தொடங்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

- Advertisement -