இலங்கைக்கு எதிரான 3வது டி20 – இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன?

0
2512

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சம நிலையில் உள்ளது. இந்த நிலையில் தொடரை தீர்மாணிக்கும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றி விடும். இதுவரை இந்திய மண்ணில் ஒருமுறை கூட இலங்கை அணி டி20 தொடரை வென்றதில்லை.

இதனால் சரித்திரம் படைக்கும் வாய்ப்பு இலங்கை அணிக்கு உள்ளது. இதனால் கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் மாற்றம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இரண்டாவது டி20 போட்டிகள் நோபால்களை அள்ளி வீசிய ஆர்ஸ்தீப் சிங் இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக நீக்கப்படுவார் என தெரிகிறது. அவருக்கு பதிலாக அனுபவ வீரர் ஹர்சல் பட்டேல்,  அல்லது முகேஷ் குமார் என்ற அறிமுக வீரர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து தொடக்க வீரராக சொதப்பி வரும் சுப்மான் கில்லுக்கு ஓய்வு வழங்கப்பட்டு ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு வழங்க ப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அப்படி நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த தொடரில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால்  அவரும் அணிக்கு திரும்பலாம். இந்த நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடாவை பந்துவீச்சில் பயன்படுத்த இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சனங்கள் அறிவுரை வழங்கி இருக்கிறார்கள்.

மற்றபடி இரண்டாவது டி20 அணியில் களம் இறங்கிய வீரர்களே இன்றைய ஆட்டத்திலும் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. இதனிடையே இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் எட்டாம் தேதி கவுகாத்தியில் நடைபெறுகிறது. இதற்காக கே எல் ராகுல், முகமது சமி உள்ளிட்ட வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அல்லது நாளையோ  கவுகாத்திக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.