இந்திய அணியில் இன்று 4 மாற்றம்..நியூசிக்கு எதிராக பிளேயிங் லெவன் என்ன தெரியுமா?

0
1268

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 1:30 மணிக்கு ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இந்திய அணி இலங்கையை ஓயிட்வாஷ் செய்த உத்வேகத்துடன் களமிறங்குகிறது. ஆனால் இலங்கையை விட பேட்டிங்,பந்துவீச்சு என அனைத்திலும் பலமான அணியாக நியூசிலாந்து தற்போது உள்ளது.

- Advertisement -

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வென்ற தெம்பு உடன் இந்தியா வருகிறது.இந்தத் தொடரில் கே எல் ராகுல், அக்சர் பட்டேல் ஆகியோர் திருமணம் காரணமாக பங்கேற்கவில்லை. அதனால் இந்த ஆட்டத்தில் நிறைய மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ரோஹித் சர்மா தள்ளப்பட்டுள்ளார். கேல் ராகுலுக்கு பதில் இசான் கிஷன் சேர்க்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சுப்மான் கில் தொடக்க வீரராக சிறப்பாக பணியாற்றி வருவதால் இஷான் கிஷன் நடுவரிசையில்  விளையாடுகிறார். இதேபோன்று இந்திய அணியில் முக்கிய வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஒரு நாள் தொடரிலிருந்து விலகி உள்ளார். இதனால் அந்த இடத்திற்கு அதிரடி பேட்ஸ்மேன் சூரியகுமார் களமிறங்குகிறார்.

இதேபோன்று அக்சர் பட்டேல் இடத்திற்கு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் களம் இறங்கலாம்ம் இதேபோன்று முகமது சமி அல்லது சிராஜ் ஆகியோருக்கு ஒரு போட்டியில் ஓய்வு வழங்கிவிட்டு அந்த இடத்தில் சர்துல் தாக்கூரை சேர்க்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதனிடையே நியூசிலாந்து அணியில் வில்லியம்சன், டிம் சவுதி சுழற் பந்துவீச்சாளர் சோதி ஆகியோர் முதல் ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டாலும்,  சிஎஸ்கே வீரர் கான்வெ, ஆலன், கிளன் பிலிப்ஸ்  போன்ற நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

- Advertisement -