பதிலடி தருமா நியூசிலாந்து.. இந்தியாவுடன் இன்று 3வது ஒருநாள் போட்டி.. பிளேயிங் XI ?

0
283

இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1:30 மணிக்கு இந்தூரில் நடைபெறுகிறது. மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி 3- 0 என்ற கணக்கில் வென்ற நிலையில் ஆறுதல் வெற்றி பெறுவதற்காக நியூசிலாந்து அணி ஆயத்தமாக இருக்கிறது. இந்திய அணியை பொறுத்தவரை தொடரை முழுமையாக கைப்பற்றும் உத்வேகத்துடன் இருக்கிறது.

தொடர் ஏற்கனவே வெல்ல பட்டதால் இன்றைய ஆட்டத்தில் பிளேயிங் லெவனில்  பல மாற்றங்களை ரோகித் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முகமது சமி இலங்கை மற்றும் நியூசிலாந்து என தொடர்ந்து ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருப்பதால் அவருக்கு ஓய்வு வழங்கப்படலாம். முகமது சமிக்கு பதில் இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் இன்று பிளேயிங் லெவனில் ரோகித் சர்மா சேர்க்கலாம்.

மேலும் காயம் காரணமாக தொடர்ந்து சில போட்டிகளில் விளையாடாத சாகலுக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இடம் கிடைக்க வாய்ப்பே ஏற்பட்டுள்ளது. தொடக்க வீரராக ரோஹித் சர்மா, சுப்மான் கில் களமிறங்க கூடும். மூன்றாவது வீரராக விராட் கோலியும், நடுவரசையில் இஷான் கிஷன், சூரிய குமார் யாதவ், ஹர்திக் பாண்டியாவும், ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், சர்துல் தாக்கூரும், இரண்டு வேகப்பந்துவீச்சாளராக உம்ரான் மாலிக், முகமது சிராஜ் ஆகியோரும், சுழற்பந்துவீச்சாளராக சாகல் அல்லது குல்திப் யாதவ்  இடம்பெற வாய்ப்பு உள்ளது .

இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள இளம் வீரர் ரஜத் பட்டிதார் இன்றைய போட்டியில் களம் இறங்குவாரா என ரசிகர்கள் எதிர் பார்த்தனர். ஆனால் அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என கூறப்படுகிறது. இந்து மைதானம் மேட்டிங்கிற்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் இந்த மைதானத்தில் டி20 போட்டியில் மோதின. அப்போது 27 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க வீரர் ரூசோவ் 48 பந்தில் சதம் விளாசினார்.  இதனால் இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா சூரியகுமார்  போன்ற வீரர்கள் கலக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரன் குவிப்புக்கு சாதகமான மைதானம் என்பதால் நியூசிலாந்தும்  பதிலடி தரும் என எதிர்பார்க்கலாம்.