வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட்.. இந்திய அணி விவரம்.. ரோகித் இருப்பாரா?

0
1261

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இன்னும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் இந்தியா நான்கு போட்டிகள் வென்றால் கூட இறுதிப்போட்டியில் விளையாட முடியும். அதே சமயம் ஆஸ்திரேலியாக்குரான டெஸ்ட் தொடரில் தற்போது தென்னாப்பிரிக்காவில் முதல் போட்டியில் தோற்றுள்ளது, இந்தியாவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.அந்த தொடரில் தென்னாப்பிரிக்கா அணி வாஸ் அவுட் ஆனால் இந்தியாவின் இறுதிப் போட்டி வாய்ப்பு மேலும் பிரகாசமாகும்.

- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முக்கியத்துடன் இந்திய அணி வீரர்கள் உள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா காயத்திலிருந்து குணமடைந்து மும்பையில் பயிற்சி செய்து வருகிறார். இதனால் அவர் கடைசி டெஸ்டில் பங்கேற்பாரா என்பது குறித்து கே எல் ராகுலுடன் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த அவர் ரோகித் பங்கேற்பது இன்னும் முடிவாகவில்லை.

இன்னும் ஒரு,  இருநாளில் பிசிசிஐ அதற்கு முடிவு எடுக்கும் என்று பதில் அளித்துள்ளார். தற்போது இந்திய அணியில் இருந்து கே எல் ராகுல் நீக்கப்பட வாய்ப்பு இல்லை. சுப்மான் கில்லும் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் ரோகித் சர்மா இரண்டாவது போட்டியில் விளையாடும் வாய்ப்பு மிகவும் குறைவு என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டாவது டெஸ்டில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேலை ரோஹித் சர்மா விளையாடினால் மட்டுமே பிளேயிங் லெவனில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே அணியே இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாடும். தமிழக வீரர் அஸ்வின் பந்துவீச்சில் மொத்தமாக ஒரு விக்கெட் தான் எடுத்திருக்கிறார். இது இது அவருடைய இடத்திற்கு ஆபத்து ஏற்படுத்தியிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

- Advertisement -