இந்தியா – ஜிம்பாப்வே ஒருநாள் தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு

0
922
India vs Zimbabwe ODI series

டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக பல டி20ஐ போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளது. 2021 ஐபிஎல், டி20 உலகக் கோப்பை, 2022 ஐபிஎல், தற்போது மீண்டும் அடுத்த டி20 உலகக்கோப்பை என 20 ஓவர் போட்டிகளை அதிக கண்டு சலிப்படைந்துள்ளனர் ரசிகர்கள். முக்கியமாக கொரோனா தொற்றுக்குப் பின் பிசிசிஐ ஒருநாள் போட்டிகளின் மீது பெரிதாக கவனம் செசெலுத்தவில்லை. கடைசியாக தென்னாபிரிக்காவில் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள், ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வேயில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளனர். இது குறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகம், “ இந்திய அணிக்காக இந்த தொடரைத் தொகுப்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். சிறப்பான தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். ” என்றது. இந்தத் தொடர் ஐசிசி ஒருநாள் சூப்பர் லீகின் சேர்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற, ஜிம்பாப்வே அணிக்கு இது மிக முக்கியமான தொடர் ஆகும். பிசிசிஐ நடத்துவதால் இந்திய அணி ஏற்கனவே அதற்குத் தகுதி பெற்றுவிட்டது. மேலும், இந்த ஒருநாள் தொடரின் மூலம் ஜிம்பாப்வே நிர்வாகம் போதுமான வருவாயை ஈட்டவுள்ளது.

இந்தியா – ஜிம்பாப்வே ஒருநாள் தொடரின் போட்டி அட்டவணை

முதல் ஓடிஐ – ஆகஸ்ட் 18
இரண்டாவது ஓடிஐ – ஆகஸ்ட் 20
மூன்றாவது ஓடிஐ – ஆகஸ்ட் 22

மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் குறித்து ஜிம்பாப்வே பயிற்சியாளர் கூறியதாவது, “ இந்திய அணிக்கு எதிராக விளையாட இது அற்புதமாக வாய்ப்பு. இளம் வீரர்களுக்கு இடையே இது ஆர்வத்தை ஓட்டும். மொத்தத்தில் இந்த ஒருநாள் தொடர் ஜிம்பாப்வே அணிக்கு நன்மை அளிக்கக் கூடியது. ”

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் டி20ஐ மற்றும் ஓடிஐ தொடரில் விளையாடி வருகின்றது. கடந்த சில மாதங்களாக இரு இந்திய அணிகளை வைத்து தான் பிசிசிஐ போட்டிகளை திட்டமிடுகிறது. அட்டவணையைப் பார்க்கையில் ஜிம்பாப்வே தொடருக்கு இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி தான் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.