நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி அறிவிப்பு ; ஹர்திக் பாண்டியா ஷிகர் தவான் கேப்டன்!

0
2331
Ind vs Nz

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரை முடித்துக் கொண்டு, அடுத்து நியூசிலாந்து சென்று அங்கு தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்களில் விளையாடுகிறது!

இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 18, 20, 22 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதற்கு அடுத்து ஒரு நாள் போட்டி தொடர் நவம்பர் 25, 27, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

தற்போது இந்த இரண்டு தொடர்களுக்கும் இந்திய தேர்வு குழு இந்திய அணியை அறிவித்து இருக்கிறது. டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். ஒரு நாள் தொடருக்கு சிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி ;

ஹர்திக் பாண்டியா கேப்டன், ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் மற்றும் துணை கேப்டன், சுப்மன் கில் தீபக் ஹூடா, இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர், வாஷிங்டன் சுந்தர், சாகல், குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங், ஹர்சல் படேல், முகமது சிராஜ், புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடருக்கான இந்திய அணி;

ஷிகர் தவான் கேப்டன், ரிஷப் பண்ட் துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர், வாஷிங்டன் சுந்தர், சர்துல் தாக்கூர், ஷாபாஸ் அகமத், சாதல், குல்தீப் யாதவ், அர்ஸ்தீப், தீபக் சஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.

இந்த இரண்டு தொடர்களுக்கும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, துணை கேப்டன் கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய டி20 அணியில் தினேஷ் கார்த்திக் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!