பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த இந்தியா; முழு சாதனை பட்டியல் உள்ளே..!!

0
1213

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றதுடன் புதிய சாதனை படைத்திருக்கிறது இந்திய அணி.

ஹராரே மைதானத்தில், நடைபெற்றுவரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம், பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.

- Advertisement -

ஜிம்பாப்வே அணியுடன் நடைபெறும் தொடரை பார்க்கையில், முதல் போட்டியில் இந்திய அணி எந்தவித சிரமமும் இன்றி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. அடுத்ததாக, இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணி எளிதாக விட்டுக் கொடுக்காமல் போராடியது. இறுதியில் இந்திய அணி 25.4 ஓவர்களில் 162 ரன்கள் இலக்கை கடந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகிக்கிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் தொடர் ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தில் முதல் வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது. 2013ல் இருந்து தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் வரை இந்திய அணி விளையாடிய 11 போட்டிகளில் அனைத்தையும் வென்று, சொந்த மண்ணிற்கு வெளியே வெளிநாட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற புதிய சாதனையை படைத்திருக்கிறது.

- Advertisement -

இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள இத்தகைய சாதனையை படைத்திருந்தன. தென் ஆப்பிரிக்கா அணி ஈஸ்ட் லண்டன் மைதானத்தில் 2013 முதல் 17 வரை தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்றிருக்கிறது. இன்னும் இந்த சாதனை உயிர்ப்புடன் இருக்கிறது. 2017க்கு பிறகு ஈஸ்ட் லண்டன் மைதானத்தில் தென்ஆப்பிரிக்கா அணி இதுவரை விளையாடவில்லை. அதற்கு அடுத்ததாக 1989 முதல் 1990ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணி சார்ஜா மைதானத்தில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்றது. 1992 முதல் 2001ம் ஆண்டு வரை வெஸ்ட் இண்டீஸ் அணி பிரிஸ்பேன் மைதானத்தில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்றது.

ஜிம்பாவே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதில் இந்திய அணி வெற்றி பெற்றால் இந்த சாதனையை மேலும் வலுப்பெறச் செய்யலாம்.