இந்தியா ரன் குவிப்பு ; விராட் கோலி நான்கு உலகச் சாதனைகள்!

0
1013
Viratkohli

எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் இன்று ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணிக்கு அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரிக்கும்!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற பங்களாதேஷ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் தீபக் ஹூடா வெளியேற்றப்பட்டு அக்சர் பட்டேல் கொண்டுவரப்பட்டார்.

- Advertisement -

இந்திய அணிக்கு இந்த ஆட்டத்திலும் கேப்டன் ரோகித் சர்மாவிடம் நல்ல துவக்கம் கிடைக்கவில்லை. அவர் இரண்டு ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதும் தடுமாறி வந்த கே எல் ராகுல் இந்த ஆட்டத்தில் சற்று சுதாரித்து அதிரடியாக ஆட ஆரம்பித்து, 32 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர் உடன் அரை சதம் அடித்து ஆட்டம் இழந்தார்.

வழக்கம்போல் விராட் கோலி ஒரு முனையில் இருந்து அவரது பாணியில் சீராக விளையாட, இன்னொரு புறத்தில் விளையாடிய சூரியகுமார் யாதவ் 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 5, தினேஷ் கார்த்திக் 7 ரன்களில் வெளியேறினார்கள்.

ஒவ்வொருத்தராக ஆட்டமிழக்க அதற்கு ஏற்றார்போல் தனது ஆட்டத்தை மாற்றி விராட் கோலி மிகச் சிறப்பாக ஆடி ரண்களை கொண்டு வந்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 44 பந்துகளில் 64 ரன்கள் 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உடன் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 184 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

ஒட்டுமொத்த t20 உலகக் கோப்பை தொடர்களில் விராட் கோலி நான்கு உலகச் சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார். டி20 உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன் அடித்தவர், அதிக ரன் சராசரி 89, அதிக அரை சதங்கள் 13, அதிக ஆட்டநாயகன் விருது 6 என நான்கு உலகச் சாதனைகள் டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி வசம் இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா நல்ல ரன் ரேட்டில் வென்றால் அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு மிக மிக அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது!