தென்னாபிரிக்காவை வீழ்த்திய நெதர்லாந்து! அரையிறுதிக்கு தகுதியானது இந்தியா!

0
4525

சூப்பர் 12 சுற்றில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி மிகப்பெரிய அப்செட் செய்துள்ளது நெதர்லாந்து அணி.

டி20 உலக கோப்பை தொடர் சூப்பர் 12 சுற்று முடிவடையும் நிலையை எட்டி இருக்கிறது. குரூப் 1 இல் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டன. குரூப் இரண்டில் அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிகளை முடிவு செய்யும் இறுதி கட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது.

நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் நெதர்லாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றாலே அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்ற நிலை இருந்தது.

அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மிபர்க்(37), மாக்ஸ்(29), டாம் கூப்பர்(35) ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்துவந்த அக்கர்மன் 26 பந்துகளில் 41 ரன்கள் அடித்தார். கேப்டன் எட்வர்ட்ஸ் 12(7) அடித்து இறுதிவரை அவுட் ஆகாமல் இருக்க 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

2வது பேட்டிங் செய்த தென்னாபிரிக்காவுக்கு மீண்டும் மோசமான துவக்கம் கிடைத்தது. டி காக்(13), பவுமா(20) இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். ரூஸோவ்(25) நிலைத்து நிற்காமல் வெளியேறினார்.

மிடில் ஆர்டரில் மார்க்ரம்(17), மில்லர்(17), பர்னல்(0) ஆகியோர் போதிய பார்ட்னர்ஷிப் அமைக்காமல் அவுட் ஆக 120/7 என தென்னாபிரிக்கா திணறியது. க்ளாசன் 21 ரன்களும், மகாராஜ் 13 ரன்களும் எடுத்து வெளியேறினார். இறுதியில் இலக்கை எட்ட முடியாமல் 8 விக்கட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்து நெதர்லாந்து அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது தென்னாபிரிக்கா.

இந்த தோல்வியால் அரையிறுதிக்கு தகுதி பெரும் பிரகாசமான வாய்ப்பையும் இழந்தது.

அடுத்து நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணி அரை இறுதி போட்டிக்கு முன்னேறும். ஒருவேளை போட்டியில் மழை குறுக்கீடு ஏற்பட்டால் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டாலும் பாகிஸ்தான் அணி 5 புள்ளிகள் மற்றும் நல்ல ரன்ரேட்டில் இருப்பதால் எளிதாக தகுதி பெற்று விடும்.

தென் ஆப்பிரிக்கா அணி பெற்ற இந்த தோல்வியால் இந்திய அணி தற்போது அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிட்டது