“ஒரு புது டி20 அணியை உருவாக்க இதான் சரியான டைம்; இவங்களை எல்லாம் தூக்கிட்டு..” – ரவி சாஸ்திரி பேட்டி!

0
22631

இளம் வீரர்களைக் கொண்டு புதிய அணியை உருவாக்க இதுதான் சரியான நேரம் என்று ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்தார்.

டி20 உலகக்கோப்பை தொடர் இந்திய அணிக்கு படுமோசமாக முடிந்திருக்கிறது. பாகிஸ்தான் அணியை வீழ்த்தி நல்ல துவக்கம் கிடைத்திருந்தாலும், நடுவில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வி மற்றும் அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி என ஒட்டுமொத்தமாக பார்க்கையில் தற்போது இருக்கும் இந்திய அணியின் காம்பினேஷன் சற்று சிக்கலாகவே இருக்கிறது.

- Advertisement -

பந்துவீச்சில் மட்டுமல்லாது இந்திய அணியின் பீல்டிங் பெரிதளவில் இல்லை. முக்கியமான கட்டத்தில் கேட்ச் மற்றும் ரன் அவுட் ஆகியவற்றை தவறவிட்டதால் தோல்விகள் நேர்ந்திருக்கிறது. தற்போது இருக்கும் இந்திய அணியில் ரோகித் சர்மா, அஸ்வின், புவி, முகமது சமி ஆகியோர் பீல்டிங் சற்று கேள்விகுறியாக இருப்பதால், இந்த உலக கோப்பை தோல்வியில் இருந்து பாடத்தை எடுத்துக் கொண்டு இளம் வீரர்களை உள்ளே எடுத்து வருவதற்கு பி சி சி ஐ முயற்சி செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்திருக்கிறார் ரவி சாஸ்திரி.

“இந்தியாவிற்கு புதிய அணி தேவை. பீல்டிங்கில் உச்சத்தை பெறுவதற்கு இளம் வீரர்கள் வேண்டும். இன்னும் துடிப்புடன் செயல்படுவதற்கு இளம் வீரர்கள் உள்ளே எடுத்து வரப்பட்டு தொடர்ந்து பயிற்சிகள் கொடுப்பதற்கு இதுதான் சரியான நேரம். இந்தியாவிற்கு புதிய டி20 அணி தேவை. இதுதான் வருங்காலத்திற்கு ஆரோக்கியமானது.” என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ரவி சாஸ்திரி.