சவுத் ஆப்பிரிக்காவை வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஒரே நாளில் இந்தியாவுக்கு இரண்டு ஹாப்பி நியூஸ்! எப்படி?

0
7027

முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதற்கு சிக்கல் குறைந்து வருகிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸ் 152 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 66 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்ஸில் முதல் இன்னிங்சை விட இன்னும் மோசமாக விளையாடியது. தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் உள்ளே வருவதும் வெளியே போவதுமாக இருந்ததால், அந்த அணியால் பெரிதளவில் ஸ்கோரை எட்ட முடியவில்லை.

இரண்டாவது இன்னிங்சில் வெறும் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 33 ரன்கள் மட்டுமே அதிகமாக அடிக்க முடிந்தது. 34 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தென் ஆப்பிரிக்கா பவுலர்கள் எளிதாக வெற்றியை விட்டுக் கொடுக்கவில்லை. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்தினர். நான்கு விக்கெட்டுகளை இழந்தபின் போராடி இலக்கை எட்டியது ஆஸ்திரேலிய அணி. இதன் மூலம் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் இந்த வெற்றி இந்தியாவிற்கு சாதகமாக அமைந்துள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதற்கு உதவியாக இருந்தது.

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெளியால் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வந்த தென்னாப்பிரிக்க அணி ஒரு இடம் பின்தங்கி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

ஆஸ்திரேலியா-தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றினால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதகமாக அமையும். அதைத்தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் தொடரில் இந்திய அணி 3-1 அல்லது 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றாலே போதுமானது. எளிதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடலாம்.