உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா வெல்லவே அதிக வாய்ப்பு – முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் அதிரடி பேட்டி!

0
1597
Finch

கிரிக்கெட்டின் முதல் வடிவமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு நவீன காலத்தில் வரவேற்பு குறைய ஆரம்பித்தது. இதை அடுத்து ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் காப்பாற்றும் பொருட்டு, ஆடுகளங்களை முடிவு நோக்கி அமைக்குமாறு கிரிக்கெட் வாரியங்களை கேட்டுக் கொண்டதோடு பகல் இரவு டெஸ்ட் போட்டிகளை நடத்தியது.

மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டியையும் நடத்தி வருகிறது. இரண்டு ஆண்டு தொடர் ஓட்டத்தில் எந்த முதல் இரண்டு அணிகள் அதிக வெற்றி சதவீதத்தை பெற்று இருக்கிறதோ அந்த அணிகள், தங்கள் நாட்டிற்கு வெளியே இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

- Advertisement -

இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இங்கிலாந்தில் வைத்து மோதிக்கொண்டன. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

தற்பொழுது இரண்டாவது டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஓட்டம் முடிவு பெற்று இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தையும் இந்தியா அணி இரண்டாவது இடத்தையும் பெற்று, ஜூன் ஏழாம் தேதி இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் மோதிக்கொள்ள இருக்கின்றன.

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் யாருக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் ” ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டி விளையாடுவாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் சமி, சிராஜ், உமேஷ் இவர்களை பார்க்கும் பொழுது, இவர்கள் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள். சிராஜ் தற்பொழுது உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார். கடைசியாக இங்கிலாந்தை இங்கிலாந்தில் வைத்து இந்த அணி வீழ்த்தி இருக்கிறது. எனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றிக்கான அதிக வாய்ப்பு இந்திய அணிக்கு இருக்கிறது!” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ஆஸ்திரேலியா தொடரை 2-1 என வென்றெடுக்க வேண்டும். டெல்லியில் ஒரு பைத்தியக்காரத்தனமாக ஒரு மணி நேரம் விளையாடி கோட்டை விட்டு விட்டார்கள். ஆனால் அதற்குப் பிறகு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாசை இழந்து, முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை சுருட்டி, பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்று ஆட்டத்தை வென்றது சிறப்பானது. 2-1 என தொடரை வென்று இருக்க வேண்டியவர்கள் தவற விட்டு விட்டார்கள்! என்று கூறியிருக்கிறார்!

தனது பேட்டிங் பார்ட்னர் டேவிட் வார்னர் பற்றி பேசும்பொழுது ” அவர் விரும்பிய அளவுக்கு அவர் அதிக ரன்கள் எடுக்கவில்லை. நாள் அது தான் கிரிக்கெட்டின் இயல்பு. அவர் சிறந்த வீரர் மற்றும் ஆஸ்திரேலியாவின் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்த வீரர். அவர் மீண்டும் தீயாக திரும்பி வருவார்!” என்று நான் நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்!