இப்படியொரு தவறை செய்த இந்திய அணி எப்படி ஜெயிக்கும்? 350 அடித்திருந்தாலும் சேஸ் பண்ணீருப்பாங்க – முன்னாள் இந்திய வீரர் கருத்து!

0
477

இந்தியா கோட்டைவிட்டது இந்த விஷயத்தில் என்று கருத்து கூறியுள்ளார் வாசிம் ஜாபர்.

ஈடன் பார்க் மைதானத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தபோது, டாப் 3 பேட்ஸ்மேன்கள் தவான், கில் மற்றும் ஷ்ரேயாஸ் மூவரும் அரைசதமடிக்க 50 ஓவர் முடிவில் 306/7 ரன்கள் ஸ்கொர் செய்தது.

இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு வில்லியம்சன் மற்றும் டாம் லேத்தம் இருவரும் அரைசதம் அடித்தனர். லேத்தம் மேலும் அதிரடியை வெளிப்படுத்த சதம் விளாசினார்.

இறுதியில், லேத்தம் 145(104) ரன்களும் வில்லியம்சன் 94(98) ரன்களும் அடித்தனர். 47.1 ஓவர்களில் இலக்கை எட்டிய நியூசிலாந்து 309/3 எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய அணி வெறும் 5 பந்துவீச்சாளர்கள் மட்டுமே கொண்டு களமிறங்கியது. வாஷிங்டன் சுந்தர் மட்டுமே எக்கானமி 4.4 ரன்களில் இருந்தார். மற்ற பவுலர்கள் 6 ரன்களுக்கும் குறையாமல் எக்கானமி வைத்திருந்தனர்.

இந்த தவறை குறிப்பிட்டு, இந்திய அணியின்தோல்விக்கு என்ன காரணம் என்பதை ட்விட்டரில் பதிவு செய்தார் இந்தியாவின் முன்னாள் துவக்க வீரர் வாசிம் ஜாபர்.

“நியூசிலாந்து சிறப்பாக விளையாடினார்கள். அவர்களது பேட்டிங் 300+ ரன்களையும் 270 போல காட்டியது. வில்லியம்சன் வழக்கம்போல தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் லேத்தம் ஆட்டத்தை மொத்தமாக இந்திய அணியிடமிருந்து பிடிங்கிக்கொண்டார். ஓப்பனிங் பேட்ஸ்மேன் மிடில் ஆர்டருக்கு மாறியபிறகு, இப்படி அபாரமாக ஆடுவது அவ்வளவு எளிதல்ல.

இந்திய அணி வெறும் 5 பவுலர்களுடன் களமிறங்கியது. இந்த இடத்தில் தான் கோட்டைவிட்டது. தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம்” என்றார் வாசிம் ஜாபர்.