“இன்னைக்கு மேட்ச்ல இந்தியா எலிமினேட் ஆகிடும்” – இன்சமாம்-உல்-ஹக் கருத்து!

0
97

இலங்கை அணியுடன் நடைபெறும் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவி எலிமினேட் செய்யப்படும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஆசிய கோப்பை தொடரின் 15 வது சீசனில் தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் 4 சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியின் போது, இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்று அதிர்ச்சி அளித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 181 ரன்கள் அடித்திருந்தது. கேப்டன் விராத் கோலி மீண்டும் பழைய பார்மிற்கு திரும்பி 44 பந்துகளில் 60 ரன்கள் அடித்திருந்தார்.

- Advertisement -

அதன் பிறகு பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு ரிஸ்வான் 71 ரன்கள் அடித்து வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றார். துருப்புச் சீட்டாக பயன்படுத்தப்பட்ட முகமது நவாஸ் 42 ரன்கள் விலாசி ஆட்டத்தின் போக்கையே பாகிஸ்தான் அணி பக்கம் திருப்பிவிட்டார். கடைசி ஓவர் வரை எடுத்துச் செல்லப்பட்ட ஆட்டம் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியாக மாறியது. மீதம் இருக்கும் இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் போதுமானது இறுதி போட்டிக்கு நுழைந்து விடலாம்.

இந்திய அணி தனது இரண்டாவது சூப்பர் 4 போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி குறித்து பலரதும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக பேசியிருக்கிறார். பாகிஸ்தானில் இருக்கும் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில்,

“நேற்றுதான் எனக்கு முதல் முறையாக தெரியவந்தது. அதிக அளவில் சந்தோசம் இருந்தாலும் நமக்கு இரவில் தூக்கம் வராது என்று. இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கடினம். இலங்கை அணியுடன் நடைபெறும் போட்டியின் போது தோல்வியை தழுவி எலிமினேட் செய்யப்படலாம்.” என்று பேசினார்.

- Advertisement -

மற்றொரு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆனால் சிக்கந்தர் பக்த் கூறுகையில், “பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் தருணத்தில் இருக்கிறது. நான்கு அணிகளில் உறுதியான அணியாக பாகிஸ்தான் அணி உள்ளது. பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவிய பிறகு இந்திய அணி அன்றைய இரவு தூக்கத்தை தொலைத்திருக்கும் இவர்கள் இலங்கை அணியுடனும் தோல்வியை தழுவுவார்கள்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது வருகிற செப்டம்பர் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும். தோல்வியை தழுவினால் ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றப்படலாம்.