74 ரன்ஸ்.. ராயுடு அதிரடியில் இந்தியா மீண்டும் சாம்பியன்.. வெஸ்ட் இண்டீஸ் அணி பைனலில் தோல்வி.. மாஸ்டர்ஸ் லீக் 2025

இண்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி விளையாடியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியின் கேப்டன் பிரையன் லாரா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் டுவைன் ஸ்மித் – பிரையன் லாரா கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

- Advertisement -

டுவைன் ஸ்மித் அதிரடியாக் ரன்களை குவிக்க, லாரா நிதானமாக ஆடினார். இதனால் முதல் விக்கெட்டுக்கு 34 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், லாரா 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த பெர்கின்ஸ் 6 ரன்களில் வெளியேற, அரைசதம் அடிப்பார் என்று பார்க்கப்பட்ட டுவைன் ஸ்மித் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

நின்று ஆடிய சிம்மன்ஸ்

இதன்பின் வந்த சிம்மன்ஸ் நிதானமாக ஒரு பக்கம் விளையாட, மறுமுனையில் ஆடிய வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இருந்தாலும் அதிரடியாக ஆடிய சிம்மன்ஸ் ஆட்டம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 100 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடிய அவர் கடைசி ஓவரில் 41 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் வினய் குமார் 3 விக்கெட்ட்களையும், நதீம் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் இந்திய அணி தரப்பில் அம்பத்தி ராயுடு – சச்சின் டெண்டுல்கர் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இருவருமே அதிரடியாக ஆடிய நிலையில், முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் குவிக்கப்பட்டது.

- Advertisement -

ராயுடுவின் அதிரடி ஆட்டம்

சிறப்பாக ஆடிய சச்சின் டெண்டுல்கர் 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேற, மறுபக்கம் வந்த குர்கீரத் சிங் மான் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தார். ஆனால் அம்பத்தி ராயுடு அதிரடியாக நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்து அசத்தினார். இதனால் 15 ஓவர்களில் இந்திய அணி 127 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ராயிடு 74 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த யூசுப் பதான் டக் அவுட்டாகி ஏமாற்றினார்.

இறுதியாக யுவராஜ் சிங் – பின்னி கூட்டணி இணைந்து நிதானமாக விளையாடி இந்திய மாஸ்டர்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது. 17.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்களை குவித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

- Advertisement -
Published by

Recent Posts