” யுனிவர்சல் பாஸ் க்ரிஷ் கெயிலின் அதிரடி ஆட்டத்தில் வீழ்ந்த இந்திய மகாராஜாஸ் அணி” – பரபரப்பான ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

0
1966

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகள் தற்போது மத்திய கிழக்கு நாடான கத்தாரில் நடைபெற்று வருகின்றன. போன்ற அணிகள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. லெஜென்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் டி20 வடிவ கிரிக்கெட் போட்டிகளாக 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் தொடரின் முதல் சீசன் 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கியது.

தற்போது மூன்றாவது சீசன் கத்தாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடரின் முதல் சீசன் ஓமன் நாட்டில் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த சீசனில் வேர்ல்ட் ஜெயன்ஸ் அணி கோப்பையை வென்று முதல் சாம்பியன் ஆனது. அதன் பிறகு கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற இரண்டாவது சீசனில் இந்தியா கேப்பிட்டல் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

- Advertisement -

தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது சீசனில் நேற்று இந்தியா மகாராஜா மற்றும் வேர்ல்டு ஜெயன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா மகாராஜா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 138 ரன்கள் மட்டுமே எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்தது. இந்தியா அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா 49 ரன்களும் மண் வேந்தர் பிஸ்லா 36 ரன்களும் எடுத்தனர். இறுதியில் வந்து அதிரடியாக ஆடிய இர்ஃபான் பதான் 25 ரன்கள் எடுத்தார் .

வேர்ல்ட் ஜெயன்ஸ் அணிக்காக சிறப்பாக பந்து வீசிய ப்ரெட்லி மூன்று விக்கெட்டுகளையும் க்ரிஷ் எம்போஃப்பு மற்றும் டினோ பெஸ்ட் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். சமீத் பட்டேல் மற்றும் மாண்டீ பனேசர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

139 ரகளை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வேர்ல்ட் ஜெயன்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. அந்த அணிக்கு துவக்க வீரராக களம் இறங்கிய யுனிவர்சல் பாஸ் கிரீஸ் கெயில் அதிரடியாக ஆடி 46 பந்துகளில் 57 ரன்களை குவித்தார். இதில் ஒரு சிக்ஸரும் ஒன்பது பவுண்டரிகளும் அடங்கும் . அவருக்கு உறுதுணையாக ஆடிய ஷேன் வாட்சன் பதினாறு பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 26 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் எளிதாக வென்று விடுவது போல் இருந்த வேர்ல்ட் ஜெயன்ஸ் அணி இந்திய மகாராஜா அணியின் சிறப்பான பந்துவீச்சினால் இறுதியில் போராடியே வெற்றி பெற்றனர். அந்த அணி வெற்றி இலக்கை 18.4 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு எட்டியது. இந்த வெற்றியின் மூலம் வேர்ல்ட் ஜெயன்ஸ் அணி முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்திய மகாராஜா அணியின் பந்துவீச்சில் யூசுப் பதான் இரண்டு விக்கெட்களையும் சுரேஷ் ரைனா,ஹர்பஜன் சிங், அசோக் டின்டா மற்றும் பிரவீன் டாம்பே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடிய கிரீஸ் கெயில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்