இமாலய சிக்ஸர்களுடன் அதிரடி துவக்கம் – வீடியோ இணைப்பு

0
109

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது .

இதில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது . இரண்டாவது பேட்டிங்கின் போது பனிப்பொழிவு காரணமாக இருக்கும் என்பதால் பில்டிங் செய்வதாக தேர்வு செய்தது .

இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் ஒப்பனர்கள் சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் துவக்கத்தில் நிதானமாக ஆடினாலும் அதன் பிறகு அதிரடியாக ஆட்டத்தை ஆடி சிறப்பான துவக்கத்தை இந்தியாவிற்கு அமைத்துக் கொடுத்தனர் .

அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா சமீப காலமாக பேட்டிங் ஃபார்ம் சரியாக இல்லாததால் விமர்சனத்திற்கு உள்ளானார் . ஆனால் இந்த போட்டியில் தூக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடிய ரோகித் சர்மா அதிரடியாக ஆடி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 47வது அரை சதத்தை பதிவு செய்தார். இதில் இரண்டு சிக்ஸர்களும் ஏழு பவுண்டரிகளும் அடங்கும் .

இலங்கை அணியினர் வீசிய பவுன்சர் பந்துகளை தனது பேவரட்டான புல் சாட்டின் மூலம் ரோகித் சர்மா சிக்ஸர்களுக்கு துரத்தியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது . குறிப்பாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் கசின் ரஞ்சிதா வீசிய பந்தில் ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர்களை உலாசினார் ரோகித் சர்மா. இரண்டுமே புல் சாட்டுகள். வீசப்பட்ட பந்தை அலட்சியமாக லெஃப்ட் சைடில் தூக்கி அடித்து சிக்ஸருக்கு துரத்திய வீடியோ உனது இணைக்கப்பட்டுள்ளது.

ரோகித் சர்மாவுக்கு உறுதுணையாக ஆடிக் கொண்டிருக்கும் சுப்மன் கில் ஒரு நாள் போட்டிகளில் தனது ஐந்தாவது அரை சதத்தை கடந்தார் . தற்போது இந்திய அணி 19 ஓவர்களில் 137 ரன்கள் விக்கெட் இழப்பின்றி எடுத்துள்ளது . ரோகித் சர்மா 71 ரன்கள்டனும் சுப்மான் கீழ் 65 ரன்கள் உடனும் களத்தில் உள்ளனர்