இரண்டாவது பயிற்சி போட்டியில் இந்தியா தோல்வி ; களமிறங்காத ரோகித் சர்மா ; காரணம் என்ன?

0
4146
ICT

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இருபத்தி இரண்டாம் தேதி துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக சென்றுள்ளது. ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி மேற்கு ஆஸ்திரேலிய பெர்த் மைதானத்தில் பயிற்சியை ஆரம்பித்தது. மேலும் மேற்கு ஆஸ்திரேலிய அணியோடு இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்தது. இதன் முதல் பயிற்சிப் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு ஆஸ்திரேலிய அணியை வென்றது.

இந்த நிலையில் இன்று 2வது பயிற்சி போட்டி மைதானத்தில் மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக துவங்கியது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ரோகித் சர்மா அணியில் இருந்தும் கேப்டன் பொறுப்பை ஏற்க வில்லை. மேலும் இந்திய அணியில் இந்த ஆட்டத்திலும் விராட் கோலிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கடந்த ஆட்டத்தில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் மற்றும் இருவரும் வெளியே அமர வைக்கப்பட்டார்கள். இவர்களுக்கு பதிலாக அஸ்வின் மற்றும் கேஎல் ராகுல் அணியில் இடம் பெற்றார்கள்.

முதலில் விளையாடிய மேற்கு ஆஸ்திரேலிய அணி 10 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்தது. அடுத்த 5 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்கள் சேர்த்து மொத்தம் 127 ரன்களை 15 ஓவரில் குவித்தது. இதற்கு அடுத்து 20 ஓவர்கள் முடிவில் 168 ரன்களை 8 விக்கெட் இழப்பிற்கு சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்சல் படேல் 4 ஓவர்கள் பந்துவீசி 27 ரன்கள் தந்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்குத் துவக்கம் தர கேஎல் ராகுல் உடன் ரிஷப் பண்ட் வந்தார். ரோகித் சர்மா களம் இறங்கவில்லை. ரிஷப் பண்ட் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர் பிளேவில் இந்திய அணி 29 ரன்கள் மட்டுமே எடுத்தது. 10 ஓவர்களுக்கு 60 ரன்கள் மட்டுமே வந்தது.

ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய கே எல் ராகுல் 43 பந்துகளில் அரை சதம் அடித்தார். கடைசி 3 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 61 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியாக இந்திய அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆட்டத்தில் கடைசிவரை ரோகித் சர்மா களம் இறங்கவில்லை. காயம் என்று எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மற்ற வீரர்கள் பேட் செய்வதற்கு வசதியாக அவர் ஒதுங்கிக் கொண்டார் என்று தெரிகிறது.

இந்திய பேட்ஸ்மேன்கள் அடித்த ரன் விபரம்;

கே எல் ராகுல் – 74 (55)
ரிஷப் பண்ட் – 9 (11)
தீபக் ஹூடா – 6 (9)
ஹர்திக் பாண்டியா – 17 (9)
அக்சர் படேல் – 2 (7)
தினேஷ் கார்த்திக் – 10 (14)
ஹர்சல் படேல் – 2 (10)
அஸ்வின் – 2* (4)
புவனேஸ்வர் குமார் – 0 (1)