இந்த அணி தான் உலககோப்பையை வெல்லும் – அடித்து சொல்லும் சுரேஷ் ரெய்னா!

0
5502

இந்திய அணி இந்த உலகக் கோப்பையை நிச்சயம் வெல்லும் என்று உறுதியுடன் சுரேஷ் ரெய்னா.

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்று உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று விளையாடிவிட்டன. மூன்றாவது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேன் மைதானத்தில் நியூசிலாந்து அணியுடன் நடக்க உள்ளது.

அதன் பிறகு அக்டோபர் 23ஆம் தேதி பாகிஸ்தான் அணியை தனது முதல் போட்டியில் இந்தியா எதிர்கொள்கிறது. இந்த போட்டி மெல்போன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணிக்கு முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகியது சற்று பின்னடைவு கொடுத்திருக்கிறது. ஆனாலும் அனுபவிக்க முகமது சமி மாற்று வீரராக அறிவிக்கப்பட்டிருப்பது நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது என பல முன்னணி விமர்சனங்கள் மற்றும் கிரிக்கெட் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கிடையில் பல்வேறு முன்னாள் வீரர்களும் வர்ணனையாளர்கள் விமர்சனங்கள் என பலரும் உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும்? மேலும் அரையிறுதிக்கு எந்த நான்கு அணிகள் செல்லும்? யார் அதிக ரன்கள் அடிப்பர்? யார் பந்துவீச்சில் அதிக விக்கெட் எடுத்து ஆதிக்கம் செலுத்துவர்? என தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா எந்த அணி உலக கோப்பையை வெல்லும் என்று ஆணித்தனமாக தனது கருத்தினை முன் வைத்திருந்தார். அவர் கூறுகையில், “ஆஸ்திரேலிய மைதானம் வேகப்பந்திற்கு சாதகமாக இருக்கும். சமீப காலமாக இந்திய வீரர்கள் குறிப்பாக கேஎல் ராகுல், சூரியகுமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மா போன்றோர் வேகபந்துவீச்சை எதிர்கொள்ளும் விதம் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. கீழ் வரிசையில் ஹார்த்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் வெளுத்து வாங்குகின்றனர்.

பந்துவீச்சில் இந்திய அணி பின்னடைவாக இருப்பது உண்மைதான். ஆனாலும் மீண்டு வரும் அளவிற்கு அத்தனை அனுபவமும் இவர்களிடம் இருக்கிறது. சந்தேகத்திற்கு இடம் இன்றி நான் கூறுவேன், நிச்சயம் இந்தியா தான் இந்த உலகக் கோப்பையை வெல்லும். இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு தயாராகி வருகிறது.” என்று தெரிவித்தார்.