டி20ல் இனி விராட் கோலி வேண்டாம்; நம்பர் 3 பிளேஸ்ல ஆடுவதற்கு சரியான வீரர் கிடைத்துவிட்டார் – தினேஷ் கார்த்திக் கருத்து!

0
2907

டி20ல் நம்பர் 3 இடத்திற்கு சரியான வீரராக ராகுல் திரிபாதி தெரிகிறார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

டி20 உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலி இன்னும் விளையாடவில்லை. ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு டி20 போட்டிகளில் இடம் மறுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் டி20 திட்டங்களில் இல்லை என்று மறைமுகமாக பிசிசிஐ அதிகாரிகள் பலர் கூறிவிட்டனர்.

- Advertisement -

ரோகித் சர்மாவின் ஓபனிங் இடத்தை நிரப்புவதற்கு வீரர்கள் வந்துவிட்டார்கள். விராட் கோலியின் இடத்தை நிரப்பு யார் சரியாக இருப்பார் என்கிற சந்தேகங்கள் தொடர்ந்து நிலவி வந்தன.

இனி அந்த சந்தேகமே வேண்டாம் நம்பர் 3 இடத்தில் ராகுல் திரிபாதியை இறக்குங்கள் அவர் சரியான வீரராக தெரிகிறார் என்று தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.

“விராட் கோலி இனி டி20 போட்டிகளில் இல்லை எனும் பட்சத்தில், நம்பர் 3 இடத்திற்கு ராகுல் திரிபாதியை களம் இறக்கலாம். பல்வேறு டி20 தொடர்களில் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார். சமீபத்தில் 22 பந்துகளில் 44 ரன்கள் விளாசினார். இலங்கை தொடரிலும் நன்றாக செயல்பட்டார்.

- Advertisement -

தனிப்பட்ட ஸ்கோருக்காக ஆடாமல் சுயநலம் இன்றி விளையாடி வருகிறார். ஐசிசி தொடர்களில் இது போன்ற அணுகுமுறை உள்ள வீரர்கள் தான் வேண்டும். சந்தேகத்திற்கு இடமின்றி இவரை தேர்வு செய்யலாம். ஸ்பின்னர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் என அனைவரையும் நன்றாக எதிர்கொள்கிறார். நிறைய வாய்ப்புகள் கொடுத்தால் உச்சம் பெறும் அத்தனை தகுதியும் உள்ளது.” என்றார்.