இலங்கை அணியில் முக்கிய வீரர் நீக்கம் இந்திய அணி பேட்டிங் தேர்வு

0
159

இந்தியா மற்றும் இலங்கை அணி களுக்கு இடையிலான மூன்றாவது டி20 இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடக்கிறது . இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியை வெற்றி பெற்று தொடரானது சமநிலையில் உள்ளது .

இந்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற இருக்கிறது . இதில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும் என்பதால் இரண்டு அணிகளும் வெற்றி பெற முழு முயற்சியை மேற்கொள்ளும் . இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

பின்னேரத்தில் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தின் காரணமாக வந்து சுவிங் ஆகும் என்பதால் முதலில் பேட்டிங் ஆட தேர்வு செய்ததாக இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார். இலங்கை அணியின் கேப்டன் சனக்காவும் முதலில் டேட்டிங் செய்யவே விரும்பியதாக கூறினார் .

இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை . ஆனால் இலங்கை அணியில் அதிரடி ஆட்டக்காரர் பனுக்கா ராஜபக்ஷா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அவிஷ்கா பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பொதுவாக இந்திய மைதானங்களில் இரவு போட்டிகளின் போது பனிப்பொழிவின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் டாசில் வெற்றி பெற்று பவுலிங் தேர்வு செய்வதையே கேப்டன்கள் விரும்புவர் . ஆனால் ஹர்திக் பாண்டியா நம்பிக்கையுடன் முதலில் பேட்டிங் தேர்வு செய்து இருக்கின்றார்.

- Advertisement -

இந்தப் போட்டி தொடரின் முடிவை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி என்பதால் இரு அணி வீரர்களின் வெற்றி பெற முயற்சிப்பார்கள். இந்தப் போட்டியின் ஆடுகளம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கின்றது . ஆனால் இந்தப் போட்டி நடைபெறுகின்ற ஆடுகளம் ஆனது பந்து வீச்சாளர்களுக்கு சிறிது உதவியை அளிக்கும் வகையில் உள்ளது .