ஒரே நாளில் 5 சாதனைகள் முறியடிப்பு.. இந்தியாவின் ரெக்காட்ஸ் விவரம்

0
1723

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறது. குறிப்பாக நான்காவது நாள் ஆட்டத்தில் மட்டும் இந்திய அணி 5 சாதனைகளை படைத்திருக்கிறது. அது என்ன என்று தற்போது பார்க்கலாம்.

- Advertisement -

இந்தத் தொடரை முதல் முறையாக பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் தயாரிக்கப்பட்டது.இதனை எடுத்து ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 480 ரன்களும், இந்திய அணி 571 ரன்களும் குவித்துள்ளது. இந்திய அணி வீரர்களுக்கு பந்துவீசிய ஆஸ்திரேலிய வீரர்கள் கலைத்துப் போனார்கள்.

சுமார் 170 ஓவர்களுக்கு மேல் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்து வீசும் நிலை ஏற்பட்டது. இதில் 142 கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சாதனை படைக்கப்பட்டது. நாதன் லயனுக்கு எதிராக இந்திய வீரர்கள் புஜாராவும், கோலியும் 500 ரன்களுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்திருக்கிறார்கள்.

இது மூலம் ஒரு பந்துவீச்சாளர் 2 பேட்ஸ்மேன்களுக்கு 500 ரன்களுக்கு மேல் விட்டு கொடுத்தது  முதல்முறையாகும்.இதைப் போன்று இந்திய அணியில் பேட்டிங் வரிசையில் உள்ள முதல் ஆறு வீரர்களும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறார்கள். இப்படி ஒரு சாதனையை இந்திய அணி முதல் முறையாக செய்திருக்கிறது.

- Advertisement -

இதேபோன்று மற்றொரு சாதனையாக இந்தியாவில் குறைந்த இன்னிங்சில் 11 ஆயிரம் ரன்கள்  அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார்.
சச்சின் இந்த சாதனையை 246 இன்னிங்சில் செய்த நிலையில் விராட் கோலி தற்போது 224 இன்னிங்ஸில் செய்திருக்கிறார்.

நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி சதம் அடித்ததன் மூலம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி சதம் அடித்திருக்கிறார்.இது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு 75 வது சதமாகும் .இதன் மூலம் குறைந்த இன்னிங்சில்  75 சதம் அடித்த வீரர் என்ற பெருமையை கோலி படைத்திருக்கிறார்.

இதைப் போன்று நரேந்திர மோடி மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த அணி என்று பெருமையை ஆஸ்திரேலியா படைத்த நிலையில் அதனை அடுத்த இன்னிங்சில் இந்தியா முறியடித்திருக்கிறது.