பங்களாதேஷை பெட்டி பாம்பாய் சுருட்டிய இந்தியா; அஸ்வின் சிராஜ் குல்தீப் அபாரம்!

0
4033
ICT

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது பங்களாதேஷ் நாட்டில் பங்களாதேஷ் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் விளையாடி வருகிறது!

இந்த போட்டிக்கு முதலில் டாசில் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இந்திய அணிக்கு முதல் நாளில் புஜாரா 90 ரன்கள், ஸ்ரேயாஸ் ஆட்டம் இழக்காமல் 82 ரன்கள், ரிஷப் பண்ட் 46 ரன்கள் என்று எடுக்க 278 ரன்கள் சேர்த்து எனது விக்கட்டுகளை இழந்திருந்தது!

- Advertisement -

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆரம்பத்திலேயே 86 ரன்களுக்கு ஸ்ரேயாஸ் ஆட்டம் இழந்தார். இதை அடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். மற்றுமொரு சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 40 ரன்கள் சேர்க்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது!

இதை அடுத்து களம் இறங்கிய பங்களாதேஷ் அணிக்கு முதல் பந்திலையே சிராஜ் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். இதற்கு அடுத்து அவர் மேலும் இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றி பங்களாதேஷ் அணியை ஆரம்பத்திலேயே நெருக்கடிக்குள் தள்ளினார். இவருடன் சேர்ந்து மற்றும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் ஒரு விக்கட்டை எடுக்க பங்களாதேஷ் முதல் நான்கு விக்கெட்டுகளை இந்திய வேகப்பந்துவீச்சாளர்களிடம் உடனடியாக தந்து விட்டது.

இதற்கு அடுத்து பந்து வீசிய அஸ்வினுக்கு விக்கட்டுகள் வரவில்லை. இதனால் குல்தீப் யாதவ் பந்து வீச்சுக்கு வந்து அடுத்தடுத்து பங்களாதேஷ் விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியை ஒட்டுமொத்தமாக சரித்தார். இன்றைய ஆட்ட நாள் முடிவில் பங்களாதேஷ் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் சேர்த்து இருக்கிறது. இன்றைய ஒரு நாளில் மட்டும் 12 விக்கெட் விழுந்து இருக்கிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு விக்கட்டை குல்தீப் யாதவ் வீழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

தற்பொழுது இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிக ரன்கள் முன்னிலைப்பெறும் வாய்ப்பில் இருக்கிறது. இந்த காரணத்தால் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்புக்கு பங்களாதேஷ் அணியால் தடை போடுவது ஆகாத காரியம் தான்!