இந்தியாவை கதிகலங்க வைத்த பங்களாதேஷ்… கடைசியில் ஹீரோ மாதிரி வந்த அஸ்வின், ஷ்ரேயாஸ்..அபார வெற்றி பெற்றது இந்தியா!

0
16620

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.

டாக்கா மைதானத்தில் வங்கதேசம் மற்றும் இந்தியா இரு அணிகளுக்கும் இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி மிகப்பெரிய சுவாரசியமாக அமைந்தது. இதில் முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணி பேட்டிங் செய்தது.

- Advertisement -

அந்த அணிக்கு அதிகபட்சமாக மோமினுள் ஹக் 84 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் ஆங்காங்கே 20, 25 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்க, 227 ரன்கள் ஆல் அவுட் ஆனது. உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் இருவரும் தலா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தனது முதல் இன்னிசை துவங்கிய இந்திய அணிக்கு எதிர்பார்த்த துவக்கம் கிடைக்கவில்லை. ஆனால் மிடில் ஆர்டரில் ரிஷப் பன்ட் மற்றும் ஷ்ரேயாஸ் இருவரும் அபாரமாக பார்ட்னர்ஷிப் அமைத்து, இந்திய அணிக்கு நல்ல ஸ்கோரை எட்ட உதவினர். ரிஷப் பண்ட் 93 ரன்களும் ஷ்ரேயாஸ் 87 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர். வங்கதேசம் அணிக்கு சாகிப் அல் ஹசன் மற்றும் தஜுல் இஸ்லாம் இருவரும் தலா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

87 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய வங்கதேசம் அணிக்கு துவக்க வீரர் ஜாகிர் ஹசன் 51 ரன்களும் லிட்டர் தாஸ் 73 ரன்களும் அடிக்க, அந்த அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஒற்றை இலக்க ரன்களுக்கு தூக்கினர் வங்கதேச பவுலர்கள். மூன்றாம் நாள் முடிவில் 42 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை எழுந்து இருந்தது இந்திய அணி.

இன்று நான்காம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்தியாவிற்கு துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெடுகள் பறிபோயின. 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இழந்திருந்த போது, அஸ்வின் மற்றும் ஷ்ரேயாஸ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர். உணவு இடைவேளைக்கு முன்பே ஆட்டத்தை முடித்து விட்டு கிளம்பி விடலாம் என எதிர்பார்த்த வங்கதேச வீரர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

இந்த ஜோடி ஒரு கட்டத்திற்கு பிறகு, அதிரடியை ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவிற்கு மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுத்தந்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் 42 ரன்களும், ஷ்ரேயாஸ் 29 ரன்களும் அடித்திருந்தனர். வங்கதேசம் அணிக்கு மெகதி ஹாசன் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி மிகுந்த நம்பிக்கையை கொடுத்திருந்தார்.

இறுதியில் இந்தியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.