விராட் கோலி புவனேஸ்வர் குமார் அசத்தல்; ஆப்கானிஸ்தானை எளிதாய் வீழ்த்தியது இந்தியா!

0
92
Virat kohli

இந்திய அணி ஆசிய கோப்பை இறுதிப் போட்டி வாய்ப்பில் இருந்து வெளியேறி இருந்தாலும், இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டி முடிந்த பிறகு, இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் விமானத்தில் ஏறும் என்பது நிச்சயம்.

ஏனென்றால் 1020 நாட்களுக்குப் பிறகு விராட் கோலியின் பேட்டில் இருந்து சதம் வந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் அச்சாணியான விராட் கோலி மீண்டும் திரும்பி வந்திருப்பது, அவரது ரசிகர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும், இந்திய அணி மற்றும் அதன் நிர்வாகத்தையும் பெரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

- Advertisement -

இன்று ஆப்கானிஸ்தான் உடன் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் விராட் கோலி துவக்க வீரராக வந்தார். ரோகித் சர்மா மற்றும் ஆர்டிக் பாண்டியா ஓய்விற்கு இருந்தனர். கேஎல் ராகுல் உடன் ஆட்டத்தை ஆரம்பித்த விராட் கோலி ஆட்டத்தின் ஆறாவது ஓவரில் இருந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். இவர்கள் இருவரும் இணைந்து 119 ரன்கள் எடுத்தனர். ராகுல் 41 பந்தில் 62 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஆனால் விராட் கோலி ஒரு முனையில் நின்று பேயாட்டம் ஆடினார். பழைய விராட்கோலி திரும்ப வந்தது போலவே இருந்தது. போல அல்ல வந்திருந்தார். அதிரடியாக விளையாடிய அவர் இன்று 61 பந்தில் 122 ரன்களை 200 ஸ்டிரைக் ரேட்டில் குவித்து மிரட்டினார். 20 ஓவர்களில் இந்திய அணி 212 ரன்கள் குவித்தது.

அடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மிகப்பெரிய சிக்கலை கொடுத்தார். பிறந்து 4 ஓவர்களை வீசி அவர் வெறும் 4 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த சரிவிலிருந்து ஆப்கானிஸ்தான் அணியால் மீளவே முடியவில்லை. ஆப்கானிஸ்தான் அணியில் இப்ராகிம் ஷட்ரண் மட்டும் தாக்குப்பிடித்து 59 பந்தில் 64 ரன்கள் அடித்தார். இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு ஆப்கானிஸ்தான் அணி 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி வாய்ப்பை இழந்து வெளியேறி இருந்தாலும், விமர்சனங்கள் எழுந்து இருந்தாலும், இன்று விராட் கோலி அடித்த சதம் மொத்த இந்திய அணியின் மனநிலையையும், விமர்சனங்கள் செய்தவர்களின் மனநிலையையும் மாற்றியிருக்கிறது என்றே கூறவேண்டும். அந்த வகையில் இந்தச் அதன் மிகவும் முக்கியமானது!