அரையிறுதிக்கு போவதே சந்தேகம் தான் – இந்தியாவை பற்றி மிகப்பெரிய கணிப்பை கூறிய முன்னாள் வீரர்!

0
5707

உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணியால் அரையிறுதி போட்டிக்கு முன்னேறுவது சற்று சிரமம் என தனது கணிப்பை கூறியிருக்கிறார் ஆகாஷ் சோப்ரா.

டி20 உலக கோப்பை தொடர் வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்குகிறது. இதற்காக இந்திய அணி 10 நாட்களுக்கு முன்னரே ஆஸ்திரேலியா சென்று இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடிவிட்டனர். இந்திய அணியின் சமீபத்திய செயல்பாடு சற்று திருப்தி அளிக்கவில்லை என்றாலும், பயிற்சி ஆட்டங்களில் முன்னணி வீரர்கள் இல்லாததால் இளம் வீரர்களை வைத்து விளையாடியது கூடுதல் நம்பிக்கையும் கொடுத்திருக்கிறது.

- Advertisement -

மேலும் இரு தரப்பு தொடர்களில் ரோகித் சர்மாவின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. ஆனால் ஆசிய கோப்பை போன்று மிகப்பெரிய தொடரில் பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது. அதே நிலை வருகிற டி20 உலக கோப்பையிலும் தொடரக்கூடாது என பலர் எதிர்பார்ப்பும் உள்ளது. இதற்கிடையில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என பலர் கருதி வந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்திய அணி பற்றி தனது கருத்தை தெரிவித்தது கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அவர் கூறியதாவது: “இந்திய அணி இடம் பெற்றுள்ள இரண்டாவது குரூப் சற்று சிக்கல் நிறைந்தது. பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இருக்கின்றன. எனது கணிப்பில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளில் இரண்டு அணி நிச்சயம் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும்.

குறிப்பாக தென்னாப்பிரிக்கா அணி நிச்சயம் முன்னேறும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டில் ஒரு அணி மட்டுமே அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். இந்திய அணி பந்துவீச்சில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. எவ்வளவு ரன்கள் அடித்தாலும் அதனை கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் அது பயனில்லை. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு மிடில் ஆர்டரில் மட்டுமே பிரச்சினை இருக்கிறது. அதனை விரைவாக சரி செய்து கொண்டால் நிச்சயம் அந்த அணியால் நன்றாக செயல்பட முடியும். பந்துவீச்சிலும் பலம்மிக்கதாக இருக்கிறது. துவக்க வீரர்களும் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர். ஆகையால் இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறுவதில் சந்தேகம்தான். இருப்பினும் தனது பந்துவீச்சு பின்னடைவை சரி செய்து கொண்டு செயல்படும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணியால் அந்த வாய்ப்பை திரும்ப பெற முடியும்.” என்றார்

- Advertisement -