மழை நின்னா என்ன? எங்களுக்கு ஃபன் தான் முக்கியம்; இன்டோர் கேம்ஸ் ஆடிய இந்தியா-நியூசிலாந்து வீரர்கள் – வீடியோ உள்ளே!

0
501

மழை காரணமாக முதல் டி20 போட்டி தாமதமாகி வந்ததால், உள்ளுக்குள்ளேயே கால்பந்து விளையாடினர் இந்தியா நியூசிலாந்து வீரர்கள்.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வெலிங்டன் மைதானத்தில் நவம்பர் 18ஆம் தேதி மதியம் 12 மணியளவில் துவங்கவிருந்தது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

- Advertisement -

விடாமல் பெய்யும் மழை!

இந்திய நேரப்படி 11:30 மணிக்கு டாஸ் போடுவதற்கு சில நிமிடங்கள் முன்பு மழை பெய்வதற்கான அறிகுறிகள் இருந்தன. மைதானம் தொடர்ந்து ஈரப்பதத்துடன் காணப்பட்டதால், டாஸ் சிறிது நேரம் ஒத்தி வைக்கலாம் என நடுவர்கள் முடிவு செய்தனர்.

சிறிது நேரத்திற்கு பிறகு மழை பெய்ய துவங்கியது. தற்போது வரை மழையின் தீவிரம் அதிகமாக இருந்ததால் டாஸ் தடைப்பட்டது.

- Advertisement -

ஆட்டம் ரத்து!

இந்திய நேரப்படி மதியம் ஒரு மணிக்குள் மழை நின்று ஆட்டம் துவங்கினால், போட்டி 16 ஓவர்கள் ஆட்டமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. போட்டி ஒரு மணி முதல் 2 மணிக்குள் துவங்கும் பட்சத்தில் ஆட்டம் தலா 12 ஓவர்கள் போட்டியாக மாற்றப்படும் என்றும் கூறப்பட்டது.

இரண்டு மணிக்குள் போட்டியை துவங்க முடியவில்லை. ஆகையால் முதல் டி20 போட்டி பந்துகள் வீசப்படாமல் ரத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குஷியாக கால்பந்து ஆடிய வீரர்கள்!

போட்டி துவங்க தாமதமானது. மழை நிற்பதாக தெரியவில்லை. ஆகையால் வீரர்கள் பொறுமைகாக்காமல் உடனடியாக உடற்பயிற்சி செய்யும் அறையை கால்பந்து அறையாக மாற்றி விளையாட துவங்கிவிட்டனர். வெளியே போட்டி நடைபெற்றிருந்தால் கூட இந்த அளவிற்கு வீரர்கள் குஷியாக இருந்திருக்க மாட்டார்கள். இரு அணி வீரர்களும் ஒன்றாக கலந்து கால்பந்து விளையாடிய வீடியோ பார்ப்பதற்கே அழகாக இருந்தது.

வீடியோ: