ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; திரும்பி வருகிறார் சி.எஸ்.கே வீரர்!

0
3421
India squad

இந்திய அணி ஐபிஎல் முடிந்து உள்நாட்டில் செளத்ஆப்பிரிக்கா அணியுடன் டி20 தொடரை முடித்துக்கொண்டு, இரண்டு அணிகளாகப் பிரிந்து அயர்லாந்திற்கும் இங்கிலாந்திற்கும் பறந்தது!

அயர்லாந்திற்குச் சென்ற இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா தலைமை தாங்க, நடைபெற்ற இருபோட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்தத் தொடரில் சஞ்சு சாம்சனின் முதல் சர்வதேச அரைசதமும், தீபக் ஹூடாவின் முதல் சர்வதேச சதமும் வந்தது!

- Advertisement -

இதே நேரத்தில் ரோகித் சர்மா கோவிட்டால் பாதிக்கப்பட, பும்ரா தலைமையில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி தோற்றது. அடுத்து இரண்டு இந்திய அணிகளும் இணைய, கேப்டன் ரோகித் சர்மா திரும்பி வந்து, தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடரை இங்கிலாந்தோடு இந்திய அணி 2-1 என வென்றது!

இதற்கடுத்து வெஸ்ட் இன்டீஸ் பறந்த இந்திய அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஷிகர் தவான் தலைமையில் வென்றது. இதையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகித் சர்மா தலைமையில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி நாளை நடக்கிறது!

இந்த நிலையில் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்க இருக்கும் ஆசியக் கோப்பையில் இந்திய அணி பங்கேற்கிறது. இதற்காக இந்திய அணி முழுயளவில் தயாராகி வருகிறது. ஆசியக் கோப்பையில் அமைக்கப்படும் அணியே டி20 உலகக்கோப்பைக்கான அணியாகவும் அமையுமென்று தகவல்கள் கூறுகிறது!

- Advertisement -

இதற்கு நடுவில் இந்திய அணி ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் ஜிம்பாப்வே சென்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான அணி ஷிகர் தவானின் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற எல்லா முன்னணி வீரர்களுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ராகுல் திரிபாதி முதல் முறையாக ஒருநாள் போட்டி அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். விராட் கோலி சேர்க்கப்படவில்லை. அவரின் ஓய்வும் தொடருகிறது. அதேபோல் காயம் சரியாகி ஆனால் கோவிட்டால் பாதிக்கப்பட்ட கே.எல்.ராகுலும் இடம்பெறவில்லை. ஆனால் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த தீபக் சாஹர் அணிக்குத் திரும்பி இருக்கிறார்!

ஜிம்பாப்வே உடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

ஷிகர் தவான் (கேப்டன்)
சுப்மன் கில்
ருதுராஜ் கெய்க்வாட்
தீபக் ஹூடா
ராகுல் திரிபாதி
இஷான் கிஷான் (வி.கீப்பர்)
சஞ்சு சாம்சன் (வி.கீப்பர்)
வாஷிங்டன் சுந்தர்
சர்துல் தாகூர்
அக்சர் படேல்
குல்தீப் யாதவ்
ஆவேஷ் கான்
பிரசித் கிருஷ்ணா
முகம்மத்சிராஜ்
தீபக் சாஹல்