வெஸ்ட்இன்டீஸ் – இந்தியா மோதும் இரண்டாவது டி20 போட்டியில் சிக்கல்; போட்டி துவங்கும் நேரம் மாற்றம்!

0
241
Ind vs wi t20 series

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் துவங்க இருக்கும் டி20 உலகக்கோப்பை மனதில் வைத்து, ஐபிஎல் தொடருக்குப் பிறகு, உள்நாட்டில் செளத்ஆப்பிரிக்கா அணியோடும், அடுத்து அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட்இன்டீஸ் என பறந்து டி20 தொடர்களில் விளையாடி வருகிறது!

இந்தத் தொடர்களில் அயர்லாந்து அணியோடு டி20 தொடரை 2-0 எனவும், இங்கிலாந்து அணியோடு 2-1 எனவும் தொடரைக் கைப்பற்றியது. உள்நாட்டில் செளத்ஆப்பிரிக்கா அணியோடு 2-2 என டி20 தொடரை சமன் செய்தது, இதற்கடுத்து வெஸ்ட்இன்டீஸ் அணியோடு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலையில் இருக்கிறது!

இந்த நிலையில் இந்தத் தொடரின் இரண்டாவது மூன்றாவது போட்டிகள் வார்னர் பார்க் செயின்ட் கிட்ஸ் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதில் இரண்டாவது போட்டி இன்று இந்திய நேரப்படி எட்டு மணிக்குத் துவங்குவதாக இருந்தது!

தற்போது இரண்டாவது போட்டி குறித்த நேரத்தில் நடைபெறுவதில் பெரிதும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டாவது போட்டி துவங்கும் நேரத்தில் மாற்றம் நடந்துள்ளது. இந்திய நேரப்படி இரவு எட்டு மணிக்குத் துவங்க வேண்டிய போட்டி, இரவு பத்து மணிக்குத் துவங்க இருக்கிறது. காரணம் என்னவென்றால் இந்திய அணி வீரர்களின் லக்கேஜ் வருவதில் ஏற்பட்ட தாமதம்தான் காரணம் என்று கூறப்படுகிறது!

இந்தத் தொடரின் நான்காவது ஐந்தாவது போட்டி அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில் நடைபெறுவதாக உள்ளது. ஆனால் இதிலும் இரு அணிகளின் வீரர்களுக்கும் விசா பிரச்சினை ஏற்பட்டு, குறிப்பிட்ட தேதியில் அமெரிக்காவில் இரு டி20 போட்டிகள் நடைபெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!