இந்தியா vs இலங்கை டி20 ஆட்டத்தில் நேருக்கு நேர் ரெக்காட்ஸ்.. மும்பை ஆடுகளம் எப்படி?

0
191

புத்தாண்டில் இந்தியா விளையாடும் முதல் கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் நடைபெறுகிறது. இலங்கைக்கு எதிரான இந்த ஆட்டத்தில் வென்று வெற்றியுடன் புத்தாண்டு தொடங்க ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி உத்வேகத்தில் இருக்கிறது. கடந்த முறை இலங்கைக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்டு தொடரில் இந்திய அணி முழுமையாக வென்று அசத்தியது.

இதில் ஸ்ரேயாஸ் ஐயர், ஆட்டம் இழக்காமல் மொத்தமாக 201 ரன்களை அடித்தார். எனினும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை பதிலடி கொடுத்தது.இதன் மூலம் தொடரை விட்டு இந்திய அணி வெளியேறும் நிலையில் ஏற்பட்டது. இதனால் ஆசிய கோப்பையில் அடைந்து தோல்விக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் மும்பை ஆடுகளம் ரன்குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பனிப்பொழிவு இருக்க அதிக வாய்ப்பு இருப்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது நலம். இலங்கை அணியிலும் பனுகா ராஜபக்சா, பதும் நிஷாங்கா, ஷனாக்கா போன்ற அதிரடி வீரர்களும், ஹசரங்கா, மகிஷ்  தீக்சணா போன்ற  சூழல் பந்துவீச்சாளர்களும் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள். இந்தியா தனது சொந்த மண்ணில் இலங்கையுடன் 13 டி20 கூட்டங்களில் விளையாடி இருக்கிறது. இதில் இந்திய அணி 11 போட்டிகளில் வெற்றி, இரண்டு போட்டிகளில் தோல்வியும் அடைந்திருக்கிறது.

இதில் கடைசியாக ஐந்து முறை மோதிய அனைத்து போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றிருக்கிறது. இலங்கை அணியை பொறுத்தவரை கடைசியாக இந்திய மண்ணில் 2016 ஆம் ஆண்டு டி20 போட்டியில் வெற்றி பெற்றது .அதன் பிறகு 6 ஆண்டுகள் இலங்கை அணியால்  வெற்றி பெற முடியவில்லை. இதனால் வரலாற்றை மற்றும் உத்வேகத்துடன் இலங்கை வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். ஆசிய  சாம்பியனை   இந்திய அணி வீரர்கள் சாதாரணமாக எண்ணி விடக்கூடாது.