கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

இந்திய அணியில் இவருக்கு மாற்று வீரரே கிடையாது.. எதிரணிக்கு ஆபத்தை தரக் கூடியவர் என பார்த்தீவ் பட்டேல் பாராட்டு

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி இன்று ஒடிசாவின் கட்டாக்கில் இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில், காயத்திலிருந்து குணமடைந்த சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா மற்றும் அனுபவ வீரர் பும்ரா ஓய்வுக்கு பிறகு இணைந்துள்ளனர்.

- Advertisement -

இப்போட்டி குறித்து முன்னாள் வீரர் பார்த்திவ் பட்டேல் கூறுகையில், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரின் கேம் ப்ளான்களும் வெவ்வேறுபட்டவை. சூர்யகுமார் ரிஸ்க் எடுத்தால், ஹர்திக் குறைந்த ரிஸ்க்கில் சிறந்த முடிவுகளைப் பெறுவார் என்றார்.

அபாயகரமான வீரர்:

ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் குறித்துப் பேசிய பட்டேல், “பெரும்பாலான பவுலர்கள் இறுதிக்கட்டத்தில் யார்க்கர்களைத் தவறவிட்டு லெங்ஸ் வீசுவார்கள். அத்தகைய சிறு தவறுகளை ஹர்திக் சிக்சர்களாக மாற்றுவார். இது அவரை அபாயகர வீரராக்குகிறது,” என்றார். “உலக கிரிக்கெட்டில் நேராக சிக்சர் அடிக்கும் தனித்திறமை பல வீரர்களுக்கு இல்லை, ஆனால் ஹர்திக் பாண்டியா அதைச் செய்வார்.”

“பந்துவீச்சில், அவர் பந்துகளை ஸ்விங் செய்து பேட்ஸ்மேனுக்கு வெளியே கொண்டு செல்வதில் வல்லவர்.பாண்டியாவின் பந்துவீச்சுத் திறனை பல எதிரணிகள் குறைத்து மதிப்பிடுகின்றன.” தங்கக் கை உள்ள அவர் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துவார் எனக் குறிப்பிட்ட பட்டேல், கிளாசன் விக்கெட் எடுத்து டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்குச் சாதகமாக மாற்றியதையும் நினைவுபடுத்தினார்.

- Advertisement -

ஹர்திக்கிற்கு மாற்றே கிடையாது:

“புதிய பந்தையும், நெருக்கடி மிகுந்த ஓவர்களையும் வீச விரும்புவார். ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றே கிடையாது; அவருக்கு மாற்று ஹர்திக் பாண்டியா தான்” என பட்டேல் வலியுறுத்தினார். உடல் தகுதியுடன் உலகக் கோப்பையில் களமிறங்கும் அவர், இந்தியாவுக்கு மிக முக்கிய வீரராகத் திகழ்வார் என்றார்.

இதையும் படிங்க: தெஆ டி20 தொடர்.. 8 வரையில் பேட்டிங் வேண்டாம்.. இத செஞ்சாலே எதிர் டீமை முடிக்கலாம் – அஸ்வின் அறிவுரை

இதுவரை ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் 98 விக்கெட்டுகளையும், பும்ரா 99 விக்கெட்டுகளையும், ஆர்ஸ்தீப் 105 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். சர்வதேச டி20 போட்டிகளில், ஹர்திக் பாண்டியா இதுவரை 98 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம், ஜஸ்பிரித் பும்ரா 99 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by