இந்திய அணி முதலில் பவுலிங்! சமி, அஸ்வின், தினேஷ் கார்த்திக் உள்ளே.. முழு பிளேயிங் லெவன் இதோ!

0
171

டாஸ் வென்று இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

நடைபெறும் எட்டாவது உலக கோப்பையில் தகுதி சுற்று முடிவடைந்து, சூப்பர் 12 சுற்று அக்டோபர் 22ஆம் தேதி துவங்கியது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இன்று (அக்டோபர் 23ஆம் தேதி) நடைபெறும் போட்டி மெல்பர்ன் மைதானத்தில நடைபெற உள்ளது.

டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கிறார். இதைப்பற்றி பேசிய அவர் பேசுகையில், “இந்த மைதானத்தில் மெல்ல மெல்ல பவுலிங் தாக்கம் குறையும். இரண்டாம் பாகத்தில் நன்றாக பேட்டிங் செய்ய முடியும். ஆரம்பத்தில் ஸ்விங் நன்றாக எடுபடும் என்பதால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்கிறேன். பிரிஸ்பேன் மைதானத்தில் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. அது இந்த மைதானத்தில் உதவும் என நினைக்கிறேன். தற்போது இந்திய வீரர்கள் களமிறங்கி செயல்படுவது மட்டும்தான் மீதம்.” என்றார்.

இந்திய அணியின் பிளேயிங்-லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (கீப்பர்), அக்சர் பட்டேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

பாகிஸ்தான் அணியின் பிளேயிங்-லெவன்:

பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (கீப்பர்), ஷான் மசூத், ஷதாப் கான், முகமது நவாஸ், ஹைதர் அலி, இப்திகார் அகமது, ஆசிப் அலி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், ஷாஹீன் அப்ரிடி.