முக்கிய துவக்க வீரர் இல்லை; இந்தியா-நியூசிலாந்து தொடருக்கான டி20 அணி அறிவிப்பு!

0
26033

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் அரை இறுதி சுற்றுடன் வெளியேறிவிட்டன. டி20 உலக கோப்பை தொடர் முடிவுற்ற பிறகு இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது.

மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் கொண்ட தொடரில் பங்கேற்க தனித்தனியான இந்திய அணி இரு வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதில் நியூசிலாந்து அணியின் முன்னணி துவக்க வீரர் மார்டின் கப்தில் மற்றும் மூத்த வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் ஆகிய இருவரும் இடம் பெறவில்லை. ஏனெனில் இவர்கள் இருவரும் நியூசிலாந்து அணியின் சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து இரு மாதங்களுக்கு முன் விலகினர். இதன் காரணமாக அணியில் இடம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

நியூசிலாந்து டி20 அணி:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே(கீப்பர்), லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ்க் சோதி, பிளேர் டிக்னர்.

நியூசிலாந்து ஒருநாள் அணி:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, டாம் லாதம் (கீப்பர்), மட் ஹென்றி.