இன்று கடைசி டி20 போட்டி.. நாயகன் மீண்டும் வரார்! ஆரம்பிக்கலஙகளா?

0
1524

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி அகமதாபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இரண்டு அணிகளும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் கடைசி போட்டியில் வெல்லும் அணியே தொடரை கைப்பற்றும். இந்த நிலையில் டி20 போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவனில்  என்ன மாற்றங்கள் செய்ய இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

- Advertisement -

நடப்பு தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பி வருகிறார்கள். குறிப்பாக டாப் 3 வரிசையில் உள்ள வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தது இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இஷான்  கிஷன் அல்லது சுப்மான் கில் இருவரில் யாரேனும் ஒருவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று ராகுல் திருப்பாதிக்கு பதில் தீபக் ஹூடா நம்பர் மூன்றாவது இடத்தில் களமிறங்க கூடும். இதனால் தீபக் ஹூடா  இடத்தில் அதிரடி விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. இதைத் தவிர பந்துவீச்சில் சிவம் மவி, ஆர்ஸ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, சாகல் , குல்தீப் ஆகிய வீரர்களே விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் வாய்ப்புக்காக வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு பிளேயிங் லெவனின் இடம் கிடைப்பது சந்தேகமே.

ஆனால் இரண்டாவது டி20 போட்டியில் விளையாடிய அதே வீரர்களுக்கு தான் ஹர்திக் பாண்டியா வாய்ப்பு கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ப்ரீத்வி ஷா, ஜித்தேஷ் சர்மா போன்ற வீரர்கள் பெஞ்சில் அமர்ந்து தங்களது ஓய்வை கழிக்க வேண்டியது தான். அகமதாபாத் மைதானத்தில் தான் ஐபிஎல் குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டார். இதனால் அந்த மைதானத்தில் எப்படி விளையாட வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஹர்திக் பாண்டியாவுக்கு நன்கு தெரியும். இது கூடுதல் சாதகமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -