நான் எதிர்ப்புகளை விரும்புகிறேன்.. எனக்கு கிடைக்கிற நல்லதுக்கு அந்த ஒரு வீரர்தான் காரணம் – அர்ஷ்தீப் பேச்சு

0
62
Arshdeep

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட அர்ஸ்தீப் சிங் ஆட்டநாயகன் விருது வென்றார். பின்பு போட்டியில் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து பேசி இருக்கிறார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறந்த புள்ளி விபரங்களை வைத்திருந்த போதும் கம்பீர் அர்ஸ்தீப் சிங்குக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. தொடர்ந்து வெளியில் இருந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அஸ்வின் வரை பலரும்தொடர்ந்து வெளியில் இருந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அஸ்வின் வரை பலரும் கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நிரூபித்த அர்ஸ்தீப் சிங்

இன்று முதலில் பந்து வீசிய இந்திய அணிக்கு தனது சிறப்பான பந்துவீச்சால் அர்ஸ்தீப் சிங் சிறந்த தொடக்கத்தை கொடுத்தார். அதிரடியாக தொடக்கத்தில் விளையாடக்கூடிய டிராவிஸ் ஹெட் மற்றும் ஜோஸ் இங்லீஷ் இருவரது விக்கெட்டையும் பவர் பிளேவிலேயே வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் இறுதிக்கட்டத்தில் பந்துவீச்சுக்கு வந்த அவர் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி அரை சதம் அடித்திருந்த ஸ்டோய்னிஸ் விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் 200 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய ஆஸ்திரேலிய அணி 186 ரன் மட்டுமே எடுத்தது. இந்திய அணி எளிதாக 18.3 ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

என்னுடைய கவனம் இதில்தான்

மீண்டும் வாய்ப்பு பெற்றது குறித்து பேசி உள்ள அர்ஸ்தீப் சிங் “நான் என்னுடைய செயல்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். நான் என்னுடைய திறமையை நம்பி நான் பயிற்சி செய்த விஷயங்களை களத்தில் செய்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது சிறப்பாக செயல்பட முடிவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிரடியாக விளையாடக் கூடியவர்களுக்கு எதிராக வந்து பேசுவது மகிழ்ச்சி. அது எனக்கு விக்கெட் கைப்பற்றும் வாய்ப்பை உருவாக்குகிறது”

இதையும் படிங்க : 218 SR.. வாஷிங்டன் சுந்தர் தெறி பேட்டிங்.. மாறும் உலக கோப்பை திட்டங்கள்.. ஆஸியை வீழ்த்தியது இந்திய அணி

“மேலும் ஒரு முனையில் பும்ரா பந்து வீசுகின்ற காரணத்தினால் மற்றவர்கள் என்னை தாக்கி விளையாட நினைக்கிறார்கள். அவர் இருப்பதால் எனக்கு விக்கெட் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நான் எனது பந்துவீச்சை ரசித்து எனது திட்டங்களை எளிமையாக வைத்திருக்கிறேன். ஆரம்பம், முடிவு என எல்லா பக்கத்திலும் நான் பந்து வீசுவேன். அதற்கு நான் பயிற்சி செய்த விஷயங்களை மட்டுமே நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -